ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பில் ஆறாம் அட்டவணை, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, 1949-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சபையால் நிறைவேற்றப்பட்டது. இந்த அட்டவணையின் படி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மலைவாழ் பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம், வாழிடப் பகுதிகள் ஆகிய உரிமைகளைக் காக்கும் பொருட்டு, தன்னாட்சி அதிகாரம் வழங்க வகை செய்கிறது.[1][2]
22-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1969 மூலம், 244ஏ பிரிவு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி அரசை நிறுவுவதற்கும், உள்ளூர் சட்டமன்றம் அல்லது அமைச்சரவை அல்லது இரண்டையும் உருவாக்க ஆறாவது அட்டவணை இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க, தன்னாட்சி மாவட்டக் குழுக்களை (Administrative District Council) (ஏடிசி) நிறுவுவதற்கு ஏற்ற சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை இது மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்த மாவட்டக் குழுக்குளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க, அந்தந்த மாநில அரசுகளின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[3]
ஆறாவது அட்டவணையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட தன்னாட்சி குழுக்கள்[தொகு]
இந்திய அரசியலமைப்ப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், கீழ்கண்ட 4 மாநிலங்களில் தன்னாட்சிப் பிரதேச நிர்வாகப்பகுதிகள் மற்றும் தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அவைகள்:
- அசாம் மாநிலத்தின் வடக்கில் போடாலாந்து தன்னாட்சி பிரதேச நிர்வாகத்தின் கீழ் போடோ பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கோக்ராஜார் மாவட்டம், சிராங் மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் பாக்சா மாவட்டங்கள் உள்ளது. [4] அசாம் மாநிலத்தின் தெற்கில் உள்ள கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் மற்றும் திமா ஹசாவ் மாவட்டங்களை மாவட்ட தன்னாட்சிக் குழுக்கள் நிர்வாகம் செய்கிறது.
- மேகாலயா மாநிலத்தில் கிழக்கு காரோ மலை மாவட்டம், கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம், தெற்கு காரோ மலை மாவட்டம், தென்மேற்கு காசி மலை மாவட்டம், தென்மேற்கு காரோ மலை மாவட்டம், மேற்கு காசி மலை மாவட்டம், மேற்கு காரோ மலை மாவட்டம், மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்,ரி-போய் மாவட்டம், வடக்கு காரோ மலை மாவட்டம், மேற்கு காரோ மலை மாவட்டம், வடக்கு காரோ மலை மாவட்டங்கள் அதனதன் மாவட்டக் குழுக்குளுடன் நிர்வகிக்கப்படுகிற்து. (Administrative District Council)
- திரிபுரா மாநிலத்தின் மலைவாழ் பழங்குடி மக்களின் பகுதிகளை நிர்வகிக்க திரிபுரா தன்னாட்சி மாவட்டக் குழுக்குள் நிறுவப்பட்டுள்ளது.
- மிசோரம் மாநிலத்தின் சக்மா மாவட்டக் குழு, லாய் மாவட்ட தன்னாட்சிக் குழு, மாரா தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, நாகா மற்றும் நேபாள பழங்குடி மலை மக்கள் வாழும் சதர் மலைகள்[5] தன்னாட்சி பிரதேச நிர்வாகக் குழு.
- மேற்கு வங்காளத்தின் வடக்கில் கூர்க்கா பழகுங்டி இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டங்கள் 14 மார்ச் 2012 முதல் கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sixth Schedule Article 244(2) and 275(1)
- ↑ Sixth Schedule – Article 244(2) & 275(1)
- ↑ Autonomous District Councils
- ↑ Bodoland Territorial Council
- ↑ Sadar Hills