ஆர். பி. லட்சுமிதேவி
ஆர். பி. லட்சுமிதேவி (R. B. Lakshmi Devi, பெப்ரவரி 2, 1917[1] - ) ஒரு தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகையாவார். சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான ஸ்ரீநிவாச கல்யாணம் திரைப்படத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]வட சென்னையில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் இவர்.[2] மௌனப் படக் காலத்தில் இயக்குநர் சி. வி. ராமனால் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1] அவரது சகோதரர் ஏ. நாராயணன் தயாரித்த ஸ்ரீநிவாச கல்யாணம் (1934) பேசும் படத்தில் முதன் முதலில் நடித்தார்.[1] பின்னர் "ஸ்டன்ட்" நடிகையாக பம்பாயில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களில் தோன்றியிருக்கிறார்.[1] 1950களின் தொடக்க காலத்திலேயே சென்னை லாயிட்ஸ் சாலை 70-ஆம் இலக்க வீட்டில் குடியேறினார். தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் குடியிருந்த லாயிட்ஸ் சாலையில் முதலில் குடியேறியவர் இவரே.[2] ஆனால் இவர் பின்னர் லாயிட்ஸ் சாலையின் அருகே இருந்த கோபாலபுரம் கணபதி குடியேற்றத்திற்கு மாறிவிட்டார்.[2] லட்சுமிதேவி மெரினாவில் குதிரை சவாரி செய்யும் பழக்கம் உடையவர்.
நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]- ஸ்ரீநிவாச கல்யாணம் (1934)
- தர்மபத்தினி (1936)
- டேஞ்சர் சிக்னல் (1937)
- பக்கா ரௌடி (1937)
- ஆனந்த ஆஸ்ரமம் (1939)
- துபான் குயின் (1940)
- பிரேமபந்தன் (1941)
- மலைமங்கை (1947)
- வீர வனிதா (1947)
பின்னணிப் பாடகி
[தொகு]1940 ஆம் ஆண்டில் வெளியான ஜயக்கொடி படத்தில் கே. டி. ருக்மணிக்கு பின்னணி பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "நட்சத்திரம் பிறந்த நாள்". குண்டூசி: பக். 34. பெப்ரவரி 1951.
- ↑ 2.0 2.1 2.2 வாமனன் (9 அக்டோபர் 2017). "செல்லுலாய்ட் ‘தேவதைகள்’ வலம் வந்த சென்னை மாநகரின் லாயிட்ஸ் சாலை!". தினமலர் இம் மூலத்தில் இருந்து 2020-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200704072726/http://www.dinamalarnellai.com/web/news/36366/. பார்த்த நாள்: 4 ஜூலை 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் இதுவகையான் - ஆர். பி. லட்சுமிதேவி ஜயக்கொடி படத்தில் கே. நடராஜனுடன் பாடிய பாடல்
- யூடியூபில் டுபான் குயீன் - இவர் நடித்த திரைப்படம்