ஆர். தமிழ்ச்செல்வன் (மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்)
இரா. தமிழ்ச்செல்வன் Captain R. Tamil Selvan | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-மகாராஷ்டிர சட்டமன்றம் | |
முன்னையவர் | ஜகனாத் செட்டி |
தொகுதி | சியான் கோலிவாடா |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
பதவியில் 2014–2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 திசம்பர் 1958 பிலாவிடுதி, கறம்பக்குடி, புதுக்கோட்டை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | mahabjp |
இரா. தமிழ்ச்செல்வன், 2014இல் சியோன் கோலிவாடா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று, மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளவர்[1] .
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ராமையா, தங்கம் தம்பதியருக்கு பிறந்த 6 மகன்களின் மூத்தவர். கடந்த 35 ஆண்டுகளாக மகாராட்டிராவின் தலைநகரமான மும்பையில் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். 2011 முதல் பாஜகவின் நகரப் பொதுச்செயலராகப் பதவி வகித்து வந்தார் . ரயில்வே சரக்கு கையாளும் ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வரும் இவருக்கு கமலா என்ற மனைவியும், மகாலெட்சுமி, வைஷாலி ஆகிய மகள்களும் உள்ளனர்.[2][3]
26/11 மும்பை தாக்குதலின் போது கசாப்பும் அவனது கூட்டாளியும் சுட ஆரம்பித்தபோது தமிழ்ச்செல்வன் சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையத்தில் சுமார் 36 உயிர்களைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்த மராட்டிய மக்கள்! 25 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ ஆனார் ஒரு தமிழர்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.
- ↑ "புதுக்கோட்டை மாவட்டப் பூர்வீகமாகக்கொண்டவர் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ- ஆனார்". பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.
- ↑ "பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழர் வெற்றி: குடிசைப் பகுதிகளை முன்னேற்ற உறுதி". பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.
- ↑ "Pudukai Ryots' Son Tamil is Now Maharashtra's Selvan".