உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். என். மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{{annotations}}}

ஆர். என். மாணிக்கம், அலுவல் புகைப்படம், பொதுப் பாதுகாப்பு தலைமை இயக்குநர்

ரிஷியூர் நடராஜா மாணிக்கம் (Rishiyur Nataraja Manickam) (1 பிறப்பு 1919 – 11 செப்டம்பர் 2015), உள்நாட்டு உளவு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளில் அதிகாரியாக பணிபுரிந்தவர். 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது இவர் வான்பரப்பு ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

இவர் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ரிஷியூர் ஊராட்சியில் 1 பிறப்பு 1919 அன்று பிறந்தார்.[1] கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சியில் இளநில பட்டப்படிப்பு முடித்த மாணிக்கம் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றார்.

தமிழ்நாடு காவல் பணியில்

[தொகு]

1943ஆம் ஆண்டில் மாணிக்கம் தமிழ்நாடு காவல் துறையில் அதிகாரியாக சேர்ந்து பதவி உயர்வு பெற்று, மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக உளவுத் துறையில் பணியாற்றினார். 3 டிசம்பர் 1950 அன்று இந்தியக் காவல் பணியில் தமிழ்நாடு தொகுதியில் சேர்ந்தார்.[2]

மத்திய காவல் பணியில்

[தொகு]

1 டிசம்பர் 1957 அன்று மாணிக்கம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் அயல் பணியாக அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன், டி. சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராக பணியில் சேர்ந்தார்.[3]பின்னர் புது தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குநர் பதவியில் இருக்கும் போது 31 ஆகஸ்டு 1963 அன்று இந்திய உளவுத்துறையில் துணை இயக்குநராக பதவியேற்றார்.[4][5]

15 டிசம்பர் 1965 அன்று இவர் தனது சொந்த தொகுதியான தமிழ்நாட்டிற்கு காவல் துறை தலைவராக மாற்றப்பட்டு,[6]தமிழக காவல் துறை தலைவராக பணியமர்த்தப்பட்டார்.

மீண்டும் மத்திய அரசின் அயல் பணிக்கு சென்ற மாணிக்கம், 1969களின் துவக்கத்தில் வான்பரப்பு ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது இவர் வான்பரப்பு ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.[7]

இவர் 30 நவம்பர் 1974 முதல் பொதுப் பாதுகாப்பு தலைமை இயக்குநரகம், எல்லைப் பாதுகாப்பு படைகளான சசசுத்திர சீமா பல் மற்றும் சிறப்பு எல்லைப்புறப் படைகளின் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.

பணி ஓய்வுக்குப் பின்

[தொகு]

மாணிக்கம் 30 சூன் 1977 அன்று பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார்..[8][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. N. Manickam in Forever Missed
  2. "History of Services of Indian Police Service as on 1st January 1960". Ministry of Home Affairs, Government of India. 1961. p. 64.
  3. Diplomatic List, 1958, Department of State, U.S.A.
  4. Gazette of India, 1963, No. 143
  5. Gazette of India, 1963, No. 192
  6. Gazette of India notification
  7. Unraveling India's Foreign Intelligence: The Origins and Evolution of the Research and Analysis Wing, Ryan Shaffer, International Journal of Intelligence and Counter-Intelligence, April 2015
  8. Author profile for Security, Espionage and Counter Intelligence
  9. Court case with R. N. Manickam as judge, 1993
  10. Court case with R. N. Manickam as judge, 1994
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._என்._மாணிக்கம்&oldid=4095150" இலிருந்து மீள்விக்கப்பட்டது