ஆர்சனிக் மூவசைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
167771-41-7 | |
ChemSpider | 28548488 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15768782 |
| |
பண்புகள் | |
As(N3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 200.98 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம்[1] |
அடர்த்தி | 2.33 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 37 °C (99 °F; 310 K)[1] |
கொதிநிலை | 62 °C (144 °F; 335 K)[1] (சிதைவடையும்) |
வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Monoclinic |
புறவெளித் தொகுதி | P21/c |
Lattice constant | a = 7.33 Å, b = 11.72 Å, c = 6.99 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
நான்முகி (வாயு) | |
மூலக்கூறு வடிவம் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | பாசுபரசு மூவசைடு ஆண்டிமனி மூவசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்சனிக் மூவசைடு (Arsenic triazide) என்பது As(N3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் டிரையசைடு, ஆர்சனசு டிரையசைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடன் அதிர்ச்சி, உராய்வு உணர்திறன் கொண்ட வெள்ளை நிறத் திடப்பொருளாகும். 37 °செல்சியசு வெப்பநிலையில் உருகும். மேலும் வெப்பப்படுத்தும்போது வெடிக்கும். நச்சுத்தன்மை மற்றும் உணர்திறன் காரணமாக, ஆர்சனிக் மூவசைடு சேர்மத்திற்கான வணிக ரீதியான பயன்பாடுகள் இல்லை.[1]
தயாரிப்பு
[தொகு]ஆர்சனிக் மூவசைடு முதன்முதலில் தாமசு எம். கிளாபோட்கே என்பவரால் 1995 ஆம் ஆண்டு முக்குளோரோபுளோரோமீத்தேனில் 0 °செல்சியசு வெப்பநிலையில் ஆர்சனிக் முக்குளோரைடுடன் சோடியம் அசைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது:[2]
- AsCl3 + 3 NaN3 → As(N3)3 + 3 NaCl
2004 ஆம் ஆண்டு கார்ல் ஓ. கிறிசுட்டே என்பவரால் ஆர்சனிக் முப்புளோரைடு மற்றும் மும்மெத்தில்சிலில் அசைடு ஆகியவற்றை வினை புரியச் செய்து மற்றொரு தயாரிப்பு முறை மூலம் தூய்மையான ஆர்சனிக் மூவசைடு பெறப்பட்டது.[1]
வாயு நிலையிலும் திட நிலையிலும், ஆர்சனிக் மூவசைடு 88.3° என்ற பிணைப்பு கோணத்துடன் ஆர்சனிக் அணுவைச் சுற்றி ஒரு முக்கோண பிரமிடு வடிவவியலை ஏற்றுக்கொள்கிறது. இந்த குறைந்த பிணைப்பு கோணம் பிணைப்பு ஆர்பிட்டால்களின் முக்கிய p- தன்மைக்குக் காரணம் ஆகும். இதன் புள்ளிக் குழு C3 ஆகும், அதாவது அசைடு குழுக்கள் சமமானவை அல்ல. இருப்பினும், திட நிலையில், ஆர்சனிக் மூவசைடு 7 என்ற ஒருங்கிணைப்பு எண்ணை அடைகிறது. இது வாயு கட்டத்தின் ஒருங்கிணைப்பு எண்ணிலிருந்து வேறுபட்டு 4 என்ற ஒருங்கிணைப்பு எண்ணைக் கொண்டுள்ளது.[1][3]
அணைவுச் சேர்மங்கள்
[தொகு]தொடர்புடைய அசிடோ ஆர்சனிக்(III) அணைவுச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டெட்ரா அசிடோஆர்சனேட்டு(III) எதிர்மின் அயனி (As(N3)4–). இது டெட்ராமெத்திலமோனியம் டெட்ரா அசிடோ ஆர்சனேட்டு(III) அணைவில் காணப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Ralf Haiges; Ashwani Vij; Jerry A. Boatz; Stefan Schneider; Thorsten Schroer; Michael Gerken; Karl O. Christe (2004). "First Structural Characterization of Binary AsIII and SbIII Azides" (in en). Chemistry: A European Journal 10 (2): 508–517. doi:10.1002/chem.200305482. பப்மெட்:14735519.
- ↑ Thomas M. Klapötke; Petra Geissler (1995). "Preparation and characterization of the first binary arsenic azide species: As(N3)3 and [As(N3)4][AsF6]" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (20): 3365–3366. doi:10.1039/DT9950003365.
- ↑ Zeng Xiaoqing; Wang Weigang; Liu Fengyi; Ge Maofa; Sun Zheng; Wang Dianxun (2006). "Electronic Structure of Binary Phosphoric and Arsenic Triazides" (in en). European Journal of Inorganic Chemistry (2): 416–421. doi:10.1002/ejic.200500720.
- ↑ Konstantin Karaghiosoff; Thomas M. Klapötke; Burkhard Krumm; Heinrich Nöth; Thomas Schütt; Max Suter (2002). "Experimental and Theoretical Characterization of Cationic, Neutral, and Anionic Binary Arsenic and Antimony Azide Species" (in en). Inorganic Chemistry 41 (2): 170–179. doi:10.1021/ic010463l. பப்மெட்:11800605.