ஆர்க்டோயிடே
ஆர்க்டோயிடே புதைப்படிவ காலம்:இயோசீன் - கோலோசீன், | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைக்கிளை | |
|
ஆர்க்டோயிடே (Arctoidea) என்பது பெரும்பாலும் ஊனுண்ணி பாலூட்டிகளின் ஓர் உயிரிக்கிளை ஆகும். இதில் அழிந்துபோன கெமிசையோனிடே (நாய்-கரடிகள்) மற்றும் தற்போதுள்ள முசுடிலோய்டியா (வீசல்கள், ராக்கூன்கள், இசுகங்குகள், சிவப்பு பாண்டாக்கள்) ஆகியவை அடங்கும். சிஎம்ஏஎச் மரபணு இன்னும் அப்படியே இருப்பதால், இந்தக் குழுவின் மிகப் பழமையான குழு கரடிகள் ஆகும். மசுடெலிடாவின் பொதுவான மூதாதையர்களில் (மசுடெலாய்டுகள் மற்றும் பின்னிபெட்சு) இந்த மரபணு செயல்படாததாகிவிட்டது.[2] ஆர்க்டாய்டுகள் நாய்கள் (கேனிட்கள்) மற்றும் அழிந்துபோன கரடி நாய்கள் (ஆம்பிசியோனிடே) ஆகியவற்றுடன் நாய்க்குழுவினைச் சார்ந்தவை ஆகும்.ஆரம்பக்கால நாய் குழுவினைச் சேர்ந்தவை மேலோட்டமாக மார்டென்சைப் போலவே இருந்தன. இவை மரங்களில் வசிக்கும் முசுட்லிட்கள் ஆகும். பெலிபார்ம்களுடன் சேர்ந்து, நாய்க்குடும்பத்தின் ஊனுண்ணி வரிசையை உருவாக்குகின்றன. சில நேரங்களில் ஆர்க்டோய்டியாவை நாய்க்குழுவிலிருந்து ஒரு தனி துணை வரிசையாகவும், பெலிபோர்மியாவுக்கு ஒரு சகோதர வகைப்பாட்டுக் குழுவாகும் கருதலாம்.
வகைப்பாட்டியல்
[தொகு]ஆர்க்டோயிடே பிளவர் (1869) என்பவரால் பெயரிடப்பட்டது. இது ஹன்ட் (2001), ஹன்ட் (2002) மற்றும் ஹன்ட் (2002) ஆகியோரால் தரவரிசைப்படுத்தப்படாத உயிரிக் கிளை ஆர்க்டோயிடியா என மீண்டும் தரவரிசைப்படுத்தப்பட்டது. இது கோரெட்சுகி (2001), ஜாய் மற்றும் பலர் (2003) மற்றும் லேப்ஸ் ஹோச்ஸ்டீன் (2007) ஆகியோரால் ஆர்க்டோயிடே என்ற மீப்பெரும் வரிசையாக மீண்டும் தரவரிசைப்படுத்தப்பட்டது. இதனை ஊனுண்ணிவரிசையில் பிளவர் (1883), பார்ன்சு (1987), பார்ன்சு (1988), கரோல் (1988), பார்ன்சு (1989), பார்ன்சு (1992), ஹன்ட் (2001), ஹன்ட் (2002) மற்றும் ஹன்ட் (2002) ஆகியோராலும் கனிபார்மியா என டெட்போர்ட் (1976), பிரையன்ட் (1991), வாங் மற்றும் டெட்போர்ட் (1992), டெட்போர்ட் மற்றும் பலர் (1994), கோரெட்சுகி (2001), ஜாய் மற்றும் பலர் (2003), வாங் மற்றும் பலர் (2005), ஓவன் (2006), பெயிஞி மற்றும் பலர். (2006) மற்றும் லேப்ஸ் ஹோச்ஸ்டீன் (2007) ஆகியோரால் வகைப்படுத்தப்பட்டது.[3][4][5]
இன்வரலாறு
[தொகு]இதன் கிளைவரைபடம் ஆறு மரபணுக்களின் மூலக்கூறு இனவரலாற்றினை அடிப்படையாகக் கொண்டது. பல மரபணுக்களின் பகுப்பாய்வினைத் தொடர்ந்து இனவரலாறு புதுப்பிக்கப்பட்டது.[6][7]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ de Queiroz, K.; Cantino, P. D.; Gauthier, J. A. (2020). Phylonyms: A Companion to the PhyloCode. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0429821219.
- ↑ Ng, Preston S.K.; Böhm, Raphael; Hartley-Tassell, Lauren E.; Steen, Jason A.; Wang, Hui; Lukowski, Samuel W.; Hawthorne, Paula L.; Trezise, Ann E.O. et al. (2014). "Ferrets exclusively synthesize Neu5Ac and express naturally humanized influenza a virus receptors". Nature Communications 5: 5750. doi:10.1038/ncomms6750. பப்மெட்:25517696.
- ↑ R. M. Hunt.
- ↑ I. Koretsky.
- ↑ J. Labs Hochstein.
- ↑ Flynn, J. J.; Finarelli, J. A.; Zehr, S.; Hsu, J.; Nedbal, M. A. (2005). "Molecular phylogeny of the Carnivora (Mammalia): Assessing the impact of increased sampling on resolving enigmatic relationships". Systematic Biology 54 (2): 317–37. doi:10.1080/10635150590923326. பப்மெட்:16012099. https://archive.org/details/sim_systematic-biology_2005-04_54_2/page/317.
- ↑ Law, Chris J.; Slater, Graham J.; Mehta, Rita S. (2018-01-01). "Lineage Diversity and Size Disparity in Musteloidea: Testing Patterns of Adaptive Radiation Using Molecular and Fossil-Based Methods" (in en). Systematic Biology 67 (1): 127–144. doi:10.1093/sysbio/syx047. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-5157. பப்மெட்:28472434.