ஆர்க்டைட்டு
Appearance
ஆர்க்டைட்டு Arctite | |
---|---|
![]() ஆர்க்டைட்டு படிகங்கள் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | (Na2Ca4(PO4)3F) |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | பளபளக்கும், துணை பளபளப்பு, முத்து போல |
ஒப்படர்த்தி | 3.13 |
ஆர்க்டைட்டு (Arctite ) என்பது Na2Ca4(PO4)3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். வடக்கு உருசியாவின் கோலா தீபகற்பத்தில் இக்கனிமம் காணப்படுகிறது[1]. நிறமற்றும், ஒளிபுகும் தன்மையும், கண்ணாடித் தன்மையும் கொண்ட ஆர்க்டைட்டு மோவின் அளவுகோலில் 5 என்ற கடினத்தன்மை மதிப்பும் 3.13 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் கொண்டுள்ளது. முக்கோணப் படிகத் திட்டத்தில் சரியான சமப்பிளவு கட்டமைப்பில் இது காணப்படுகிறது [2]. இயற்கையாகத் தோன்றும் தலைகீழ்பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு கொண்ட கனிமம் என்றும் கருதப்படுகிறது[3]. பொதுவாக தெனார்டைட்டு, உம்பைட்டு, லோமோனோசோவைட்டு, நாட்டிசைட்டு, ஏகிரைன் போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இது கிடைக்கிறது .[1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆர்க்டைட்டு கனிமத்தை Arc என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.