ஆரிய மாயை
ஆரிய மாயை (Arya Mayai) என்ற நூல் கா. ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய ஒரு சிறு நூலாகும். மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்கள் கடுமையாகச் சாடப்பட்டுள்ளதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்தக் காரணங்களுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதம்[1] மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.[2]
நூலில் அண்ணாவின் முன்னுரை
[தொகு]ஆரிய மாயை எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சிகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விளக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சளர்களுக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.
நூலைப் பற்றி அண்ணா
[தொகு]ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.அண்ணாத்துரை உள்ளதைத்தான் எழுதினான் என்ற அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramanujam, KS (1967). The big change. Higginbothams. p. 226.
- ↑ Asaan, GVK (2008). "Anna the genius". The birth centenary of Arignar Anna (C.N. Annadurai – 15 September 1909 – 3 February 1969) is being celebrated between September 2008 and September 2009. The first part of his life sketch appeared in the September issue. In this issue we give the second and the concluding part. Modern Rationalist. Archived from the original on 26 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2008.
- ↑ மேடைப்பேச்சு சென்னை மாவட்ட தி.மு.க. முதல் மாநாடு - 1950 - அண்ணா)