ஆரவல்லி பல்லுயிர் பூங்கா, குர்கான்
ஆரவல்லி பல்லுயிர் பூங்கா Aravali Biodiversity Park, Gurgaon | |
---|---|
ஆரவல்லி பல்லுயிர் பூங்கா, குர்கான் சரிவு | |
வகை | இயற்கை சூழல் |
அமைவிடம் | குர்கான், அரியானா |
அண்மைய நகரம் | குர்கான் |
ஆள்கூறு | 28°29′00″N 77°06′43″E / 28.483213°N 77.111888°E |
பரப்பளவு | 153.7 ஹெக்டேர் |
உருவாக்கம் | 2010 |
இயக்குபவர் | குர்கான் மாநகராட்சி & அயம்குர்கான் |
திறந்துள்ள நேரம் | 5:30 am - 11:00 am and 3:00pm - 6:30 pm (கோடைக் காலம்) 6:00 am - 5:30 pm (குளிர் காலம்) |
நிலை | திறந்துள்ளது |
ஆரவல்லி பல்லுயிர் பூங்கா, குர்கான் (Aravali Biodiversity Park, Gurgaon) என்பது 153.7 ஹெக்டேர் பரப்பளவில், இந்தியாவின் அரியானாவின் குர்கானில் உள்ள குரு துரோணாச்சார்யா மெற்றோ நிலையத்திற்கு அருகில் உள்ளது. இப்பூங்காவில், சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட மற்றும் பகுதி வறண்ட நில தாவரங்கள் உள்ளன. இந்த பூங்கா 2010 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5ல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[1] இந்த பூங்காவில் இப்பகுதியினைச் சார்ந்த தாவர நாற்றங்கால் மற்றும் நுழைவாயிலில் விளக்கக் காட்சிகள் பல உள்ளன.
தாவர மற்றும் விலங்கு வாழ்க்கை
[தொகு]பூங்காவின் இயற்கையான தாவரங்கள் வடக்கு வெப்பமண்டல வறண்ட இலையுதிர் வனப்பகுதி தாவரங்கள் (அனோஜீசசு பெண்டுலா மற்றும் போசுவெலியா வன எடாபிக் துணை வகைகள் உட்பட) மற்றும் சாம்பியன் மற்றும் சேத் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு வெப்பமண்டல முள் வன வகைகளுக்குள் அடங்கும்.[2] இந்த பூங்காவில் 300க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வறண்ட பிராந்திய லித்தோஃபைட்டுகள் உள்ளன.[3]
மேலும் 185க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்த பூங்காவில் பதிவாகியுள்ள. இது ஈபேர்ட் செறிவிடமாம்.[4] சமீபத்திய ஆய்வில், பூங்காவைப் பயன்படுத்தி பல்வேறு வகையான பூர்வீக பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இவை சுற்றுச்சூழல் ரீதியாக மீட்கப்படாத பகுதிகளைக் காட்டிலும் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்டன.[5] இந்திய உடும்பு போன்ற ஊர்வன மற்றும் வடக்கு அல்லது ஐந்து கோடுகள் கொண்ட பனை அணில், நீலான், பொன்னிறக் குள்ளநரி, இந்தியக் குழிமுயல், ஆசிய மரநாய் மற்றும் இந்தியச் சாம்பல் கீறிப் போன்ற பாலூட்டிகளும் பூங்காவில் காணப்படுகின்றன.
-
நீண்ட அலகு கொண்ட பிபிட்
-
கரிச்சான்
-
குறைந்த வைட்ரோட்
-
புல்வெளிக் கழுகு
-
வெள்ளை காது சின்னான்
மறுசீரமைப்பு
[தொகு]குர்கானில் உள்ள ஆரவல்லி பல்லுயிர் பூங்கா அமைந்துள்ள பகுதி 1980கள் மற்றும் 1990களில் பல சுரங்க குழிகளைக் கொண்டிருந்தது. மேலும் எட்டு செயலில் உள்ள கல்குவாரிகளும் கல் உடைக்கும் மண்டலமும் இருந்தன. சுரங்க மற்றும் கல் உடைத்தலுக்கு 2002ல் உச்சநீதிமன்றம் விதித்த தடைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு 2009 முதல் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது. சுரங்க நடவடிக்கைகள் மற்றும் பிற இடையூறுகள் தரிசு மலைச் சரிவுகள், நீர் அட்டவணையின் மாற்றம் மற்றும் மோசமான நிலையில் மண் மூடி காணப்பட்டது. எஞ்சியிருந்த காடுகளும் மோசமான நிலையில் சீமைக் கருவேலின் ஆக்கிரமிப்பிலிருந்தது.[3]
2010இல், 'அயம்குர்கான்' என அழைக்கப்பட்ட தொண்டு நிறுவனம் இந்நிலையினைக் கருத்தில் கொண்டு, குடிமக்கள் குழுவினராக,[6] இலத்திகா துக்ரால், [7] சுவான்சால் கக கபூர், காயத்ரி சிங் மற்றும் மறைந்த அடல் கபூர் ஆகியோரின் முயற்சியால் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக ஆரவல்லி பல்லுயிர் பூங்கா, குர்கான் தோற்றுவிக்கப்பட்டது. சேதமடைந்த நிலப்பரப்பை மீட்டெடுக்கச் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பயிற்சியாளர் விஜய் தாஸ்மனாவை 201 இல் பணியமர்த்தினர். அதன்பிறகு இப்பகுதியினைச் சார்ந்த ஆரவல்லி வன தாவரங்களை மீண்டும் கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள மங்கர், நஹர்கர், மற்றும் கும்பல்கர் ஆகிய இடங்களில் உள்ள இயற்கை காடுகள் மற்றும் தாவரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளிலிருந்து சுமார் 200 பூர்வீக தாவர இனங்களின் நாற்றுகள் வளர்க்கப்பட்டன. சீமைக் கருவேலம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு அன்னிய இனங்கள் கவனமாக அகற்றப்பட்டு, ஆரவல்லி மலைத்தொடரின் பூர்வீக தாவரங்கள் நடப்பட்டன. இவற்றில் இப்பகுதி தாவர இனங்களான பறங்கி சாம்பிராணி (போஸ்வில்லியா செரட்டா), செந்தணக்கு, (செர்குலியா அர்னென்சு), அனோஜிசுசு பெண்டுலா, குடசப்பாலை, நீர்க்கடம்ப மரம் (கைம்), வெப்பாலை, கோமிபோரா விக்டீ, இடம்புரி, கருவாகைமற்றும் பல நடப்பட்டடச் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. பழைய சுரங்க தளத்திற்கு அருகிலுள்ள புல்வெளிகள் மற்றும் பருவகால குளம் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களையும் இந்த பூங்கா நிர்வாகம் பராமரிக்கிறது.[3]
-
வேலியுடன் கூடிய வாழ்விடம் மற்றும் மரக்கன்றுகள்
-
மறுசீரமைப்பு நடவுக்காக மரக்கன்றுகள் எடுக்கப்படுகின்றன
-
மறுசீரமைப்பு நடவு
பூர்வீக தாவரங்கள் நாற்றங்கால்
[தொகு]குர்கான் மாநகராட்சியுடன் பூங்காவை நிர்வகிக்கும் உள்ளூர் இலாப நோக்கற்ற அயம்குர்கான் என்ற தொண்டு நிறுவனத்தால் பூர்வீக தாவர நாற்றங்கால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆரண்யா மற்றும் வனஜா என இந்த நாற்றங்காலுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. இவை முறையே 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பூங்கா பகுதியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக நாற்றுகள் நடப்படுகின்றன. 160க்கும் மேற்பட்ட பூர்வீக தாவர இனங்கள் பூங்காவில் வளர்க்கப்பட்டு நடப்பட்டுள்ளன.[3]
சர்ச்சைகள்
[தொகு]அக்டோபர் 2018இல், பூங்கா வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்ட 6 வழி நெடுஞ்சாலை காரணமாகப் பூங்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பூங்காவைப் பாதுகாப்பதற்கும், நெடுஞ்சாலை அமைக்கப்படுவதைத் தடுப்பதற்கும் ஆதரவாக பல்வேறு குடிமக்கள் குழுக்களும் குருகிராம் குடியிருப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.[8][9] இதனைத் தொடர்ந்து தேசிய சாலைப் போக்குவரத்து முகமை மாற்று வழிக்கு யோசித்து வருகிறது.[10]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aravalli Bio Diversity Park – I am Gurgaon". iamgurgaon.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-27.
- ↑ Champion, Harry G.; Seth, S. K. (1968). A revised survey of the forest types of India. New Delhi: Manager of Publications, Government of India.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Dhasmana, Vijay. 2016. Healing Touch: Aravalli Biodiversity Park, Gurgaon. பரணிடப்பட்டது 2018-01-23 at the வந்தவழி இயந்திரம் Journal of Landscape Architecture 49: 18-25.
- ↑ ebird. "eBird--Aravalli Biodiversity Park, Gurgaon". eBird (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bansal, Misha. 2017. Evaluating the impact of ecological restoration on the bird community of Aravalli Biodiversity Park, Gurugram. M. Sc. Dissertation, School of Life Sciences, Jawaharlal Nehru University, New Delhi.
- ↑ "iamgurgaon – Work Together. Make a Difference" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Turning the city green, a million trees at a time". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Thousands gather to protest NHAI’s road plan in Aravali Biodiversity Park". https://timesofindia.indiatimes.com/city/gurgaon/thousands-gather-to-protest-nhais-road-plan-in-aravali-biodiversity-park/articleshow/66407137.cms.
- ↑ "Citizens protest planned road through Aravali Biodiversity Park". https://www.thehindu.com/news/cities/Delhi/citizens-protest-planned-road-through-aravali-biodiversity-park/article25355378.ece.
- ↑ https://www.hindustantimes.com/gurgaon/to-save-aravalli-biodiversity-park-nhai-now-looks-for-alternative-route/story-7m1ZTcHlY5NXQY1oObukBI.html