உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்பூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°47′N 78°43′E / 12.78°N 78.72°E / 12.78; 78.72
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பூர் தொடர்வண்டி நிலையம்
Ambur Railway Station
தொடர்வண்டி நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆம்பூர்,
இந்தியா
ஆள்கூறுகள்12°47′N 78°43′E / 12.78°N 78.72°E / 12.78; 78.72
ஏற்றம்330 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை செண்டரல்–பெங்களூர் நகர வழித்தடம்
நடைமேடை3
இணைப்புக்கள்தானியக்கம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt Grade
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAB
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
வரலாறு
மறுநிர்மாணம்2010
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் ஒரு நாளுக்கு 1500


ஆம்பூர் தொடர்வண்டி நிலையம் (Ambur railway station) என்பது தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொடர்வண்டி நிலையமாகும். இந்த புகைவண்டி நிலையம் மாதிரி புகைவண்டி நிலையமாக பிரகடனம் செய்யப்பட்டது. தினசரி வருவாய் ஒரு லட்சம் ரூபாய் அடிப்படையில் வகுப்பு-பி பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.[1]

வசதிகள்[தொகு]

இந்த நிலையத்தில் காத்திருப்பு அறைகள், தங்குமிடங்கள், ஓய்வு அறைகள், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத மேல் வர்க்கப் பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் ஆண்கள் & பெண்களுக்கான தனித்தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

விரிவாக்கம்[தொகு]

ஆம்பூர் புகைவண்டி நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் 2008 ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் இரா.வேலு அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், புதிய புகை வண்டி நிலைய நடை மேடையும் 2 & 3 நடை மேடைகள் நீட்டிப்பு மற்றும் காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், நவீன தங்குமிட வசதி போன்ற பிற வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "New model station building with more amenities in Ambur". தி இந்து. 1 August 2010.