ஆம்பர்கு
ஆம்பர்கு (/ˈhæஎம்பிɜːrɡ//ˈhæmbɜːrɡ/; டாய்ச்சு ஒலிப்பு: [ˈhambʊɐk] ( கேட்க), உள்ளூர் உச்சரிப்பு IPA: [ˈhambʊɪ̯ç] (ⓘ); நேதர்துவித்து மொழி Hamborg - [ˈhambɔːç] (ⓘ)), ஆம்பர்கு, செர்மனியின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 1.7 மில்லியன்.
தொடர் வெள்ளம், ஆம்பர்கின் பெருந்தீ, இராணுவ மோதல்கள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் குண்டுத் தாக்குதல்களால் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு வந்த இந்நகரம் , ஒவ்வொரு பேரழிவுக்கு பிறகும் மீண்டு வந்தது.
செக் குடியரசில் உருவாகி ஜெர்மனி வழியாகப் பாயும் எல்பி ஆற்றில் ஆம்பர்கு ஒரு முக்கிய துறைமுகமாகும்.[1] ஏர்பஸ், யுனிலிவர் போன்ற நிறுவனங்களின் ஊடகங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்துறை மையமாகவும் விளங்குகிறது. ஆம்பர்கு, பல நூற்றாண்டுகளாக முக்கிய நிதி மையமாகவும்,செர்மனியின் பழமையான பங்குச்சந்தையாகவும், உலகின் இரண்டாவது பழமையான வங்கியான பெரென்பெர்க் வங்கியுள்ள நகரமாகவும் உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "World Port Ranking 2011" (PDF).