உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிள் ஓடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிள் ஓடை
தால் ஒழுங்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட நிலையில், நீல நிறத்தில் ஆப்பிள் ஓடை முன்னிலைப்படுத்தப்பட்டது
விவரக்குறிப்புகள்
நீளம்2.22 மைல்கள் (3.57 km)
கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரம்5,215 அடி (1,590 m)
நிலைactive
புவியியல்
ஆரம்ப புள்ளிஜீலம் ஆறு
முடிவுப் புள்ளிஜீலம் ஆறு
உடன் இணைகிறதுதால் ஏரி

சோன்ட் கோல் (Tsuont Col) (காஷ்மீர்: /t͡sũ:ʈʰ kɔl/, 'ஆப்பிள் ஓடை') என்பது இந்திய மாநிலமான சம்மு-காசுமீரில் சிறிநகர் வழியாகச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கால்வாய் ஆகும். இது தால் ஏரியின் நீர் மட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது சுழியம் பாலத்தின் வடக்கு முனைக்கு அருகில் ஜீலத்திலிருந்து பிரிந்து பழைய நகரத்தின் மைசுமா பகுதியில் மீண்டும் இணைகிறது. இது புட்சா பாலத்திற்குச் சில மீட்டர் கீழே உள்ளது. சற்று அதிக உயரத்தில் அமைந்துள்ள தால் ஏரியில் நீர் மட்டத்தை ஒழுங்குபடுத்த தால் கேட் என்று அழைக்கப்படும் ஓர் ஒழுங்கு வாயில் உள்ளது. தால் வாயிலுக்குப் பிறகு சினார் பாக் என்று அழைக்கப்படும் ஒரு தீவு இந்தக் கால்வாயில் உள்ளது.[1]

வரலாறு

[தொகு]

ஆப்பிள் ஓடைக் கால்வாய் பண்டைய காலத்திலிருந்தே "மகாசரித்" என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதன் முக்கிய நோக்கம் எப்போதுமே தால் ஏரியின் உபரி நீரை ஜீலத்திற்கு எடுத்துச் செல்வதாகும்.[2] இதன் கரையில் பல வகையான மரங்கள் இருந்ததால், "பாம்ப்-சூன்ட்" என்ற காசுமீரி வார்த்தையிலிருந்து இக்கால்வாய் இதன் பெயரைப் பெற்றது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vitasta".
  2. Hussan, M. (1959), Kashmir Under the Sultans, Aakar Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-878-7949-7
  3. "Lost Venice".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_ஓடை&oldid=4061001" இலிருந்து மீள்விக்கப்பட்டது