ஆப்திடலைட்டு
ஈரான் நாட்டின் கொம் மாகாணத்தில் கிடைத்த ஆப்திடலைட்டு கனிமம். | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (K,Na)3Na(SO4)2 |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளை, நிறமற்றது; சேர்த்தல்கள் மற்றும் அசுத்தங்கள் காரணமாக சாம்பல், நீலம், பச்சை |
படிக இயல்பு | (சிதைந்த போலி-நேர்ச்சாய்சதுரத்துடன்) தட்டையான படிகங்கள்; தகட்டுக் கட்டமைப்பு திரட்டுகளாகவும், மேலோடுகளிலும் |
படிக அமைப்பு | முக்கோணம் |
இரட்டைப் படிகமுறல் | On {0001} இல் அல்லது {1120} இல் திருப்பங்களுடன் |
பிளப்பு | {1010} இல் சுமார், {0001} இல் பலவீனம் |
முறிவு | சங்குருவம் முதல் ஒழுங்கற்ற உருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | பளபளப்பும் பிசின் தன்மையும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 2.66–2.71 |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சுl (+) (தானியக்கமாக ஈரச்சு) |
ஒளிவிலகல் எண் | nω = 1.487 - 1.491 nε = 1.492 - 1.499 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.005 |
கரைதிறன் | தண்ணிரில் கரையும் |
மேற்கோள்கள் | [1][2][3] |
ஆப்திடலைட்டு (Aphthitalite) என்பது (K,Na)3Na(SO4)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் சல்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆப்திடலைட்டு கனிமத்தை Att[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
ஆப்திடலைட்டு முதன்முதலில் 1835 ஆம் ஆண்டு இத்தாலியின் வெசுவியசு மலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. காற்றில் இதன் நிலைத்தன்மைக்காக இந்த பெயரின் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.[1] எரிமலை சூழல்களில் எரிமலைவாய் உட்செலுத்துதல்களாகவும், ஆவிப் படிவுகளிலும் குவானோ படிவுகளிலும் சிறிய படிகங்கள் மற்றும் நிறைகளாக கிடைக்கிறது.[2][3]தெனார்டைட்டு, இயரோசைட்டு, சில்வைட்டு, ஏமடைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து எரிமலை வாய்களில் இது காணப்படுகிறது. மிராபிலைட்டு, பிளாடைட்டு, சின்கெனைட்டு, பிக்ரோமெரைட்டு, போராக்சு மற்றும் பாறை உப்பாக ஆவியாக்கிகளிலும், குவானோ படிவுகளில் ஜிப்சம், ஒயிட்லாக்கைட்டு, மோனெடைட்டு, நைட்டர் ஆகியவற்றுடன் சேர்ந்தும் ஆப்திடலைட்டு காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mindat.org
- ↑ 2.0 2.1 Webmineral data
- ↑ 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.