உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் இஸ்லாமியக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் இஸ்லாமியக் குடியரசின் கொடி.
ஆப்கானித்தான் இஸ்லாமியக் குடியரசின் இலச்சினை.

ஆப்கானித்தான் இஸ்லாமியக் குடியரசு என்பது 2004 முதல் 2021 வரை ஆப்கானித்தானை ஆண்ட ஒரு தலைவர் ஆளும் அரசு முறைமை ஆகும். தாலிபான்களால் ஆளப்பட்ட ஆப்கானித்தான் இஸ்லாமிய அமீரகத்தை, 2001ஆம் ஆண்டு ஆப்கானித்தான் மீதான ஐக்கிய அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஆப்கான் இடைக்கால அரசு (2001-2002) மற்றும் ஆட்சி மாற்ற அரசு (2002-2004) ஆகிய நிர்வாகங்களை மாற்றுவதற்காக இந்த அரசானது நிறுவப்பட்டது. எனினும், 15 ஆகத்து 2021ஆம் ஆண்டு ஆப்கானித்தானானது மீண்டும் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது. ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் நீண்ட போரான 2001-2021ஆம் ஆண்டு போரின் முடிவை இது குறித்தது.[1] அசரஃப் கனி அகமத்சய் தலைமையிலான இஸ்லாமியக் குடியரசு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதற்கு இது இட்டுச் சென்றது. தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் இசுலாமிய அமீரகமானது மீண்டும் நிறுவப்பட்டது.[2][3][4][5]

உசாத்துணை

[தொகு]
  1. Cruickshank, Paul; Hummel, Kristina, தொகுப்பாசிரியர்கள் (November 2021). "An Assessment of Taliban Rule at Three Months". CTC Sentinel (West Point, New York: Combating Terrorism Center) 14 (9): 1–14. https://ctc.usma.edu/wp-content/uploads/2021/11/CTC-SENTINEL-092021.pdf. பார்த்த நாள்: 29 November 2021. 
  2. Borger, Julian (18 May 2022). "US withdrawal triggered catastrophic defeat of Afghan forces, damning watchdog report finds". தி கார்டியன். https://www.theguardian.com/world/2022/may/18/afghanistan-us-withdrawal-defeat-watchdog-report-sigar. 
  3. "US withdrawal prompted collapse of Afghan army: Report". Al Jazeera. 18 May 2022. https://www.aljazeera.com/news/2022/5/18/us-withdrawal-prompted-collapse-of-afghan-army-report. 
  4. "Afghan vice president says he is "caretaker" president". reuters.com. 17 August 2021. Archived from the original on 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  5. "An anti-Taliban front forming in Panjshir? Ex top spy Saleh, son of 'Lion of Panjshir' meet at citadel". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.