உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்த் மகாராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்த் மகாராஜ் (Anant Maharaj) என்று அழைக்கப்படும் ஆனந்த் ராய் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு சூலை 2023-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][1][4] கிரேட்டர் கூச் பெஹார் மக்கள் சங்கத்தின் பிரிவுக்குத் தலைமை தாங்கிய, ஆனந்த் ராய் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ‘மகராஜ்’ பட்டத்தைப் பெற்றார். இவர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வங்காளத்தின் மக்கள்தொகையில் சுமார் 33 லட்சம் பேர் கொண்ட ராஜ்பன்ஷி அல்லது கோச்-ராஜ்பன்ஷி சமூகத்தினைச் சேர்ந்தவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Dey, Sreyashi (13 Jul 2023). "Why BJP picked Anant Maharaj, campaigner for Cooch Behar statehood, as 1st RS candidate from Bengal". ThePrint. Retrieved 17 Jul 2023.
  2. "S Jaishankar, Derek O'Brien Among 11 To Be Elected To Rajya Sabha Unopposed". NDTV.com. 22 Feb 2019. Retrieved 17 Jul 2023.
  3. Ghosh, Sujay (16 Jul 2023). "TMC to win all six Rajya Sabha seats unopposed, so will BJP's Anant Maharaj". India Today. Retrieved 17 Jul 2023.
  4. Ghosh, Sujay (12 Jul 2023). "Anant Maharaj is BJP's Rajya Sabha candidate from West Bengal". India Today. Retrieved 17 Jul 2023.
  5. https://theprint.in/politics/why-bjp-picked-anant-maharaj-campaigner-for-cooch-behar-statehood-as-1st-rs-candidate-from-bengal/1667784/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_மகாராஜ்&oldid=3992377" இலிருந்து மீள்விக்கப்பட்டது