உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிலா சூர்யத்ஜயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிலா சூர்யத்ஜயா
தொழில்தயாரிப்பாளர், இயக்குநர்,சமூகவாதி
தேசியம்இந்தோனேசியர்
காலம்2010 முதல் தற்போது வரை
துணைவர்எட்வர்டு சூர்யத்ஜயா (திஜா ஹன் ஷேக்)
பிள்ளைகள்6

ஆதிலா சூர்யத்ஜயா (இயற்பெயர் : பண்டோரோ ராடன் ஆயு ஆதிலா ரபாத்ரியாதி) (பிறப்பு:ஏப்ரல் 28, 1961 ) ஒரு இந்தோனேசிய நாடகத் தயாரிப்பாளர், இயக்குனர், நடனக்கலைஞர், தொழிலதிபர், மற்றும் சமூகவாதியும் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார் [1] இவரது பாட்டனார் சுராகார்த்தாவைச் சார்ந்த சாவானிய மரபின் அரசர் ஏழாம் மங்குநேகரான் என்பராவார். ஆகையால் இயல்பாகவே இவர் சாவானிய சீமாட்டியாக வாழ்ந்தார். அஸ்ட்ரா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வில்லியம் சூர்யத்ஜயா மகன் எட்வர்ட் சூர்யத்ஜயா என்ற தொழில் அதிபரை அவர் திருமணம் செய்து கொண்டார்.[2]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

பண்டார ராடண் ஆயு ஆதிலா ரபத்ரியாதியாசு என்ற இயற்பெயருடைய ஆதிலா சூர்யத்ஜயா சுராகார்த்தாவைச் சார்ந்த சாவானிய மரபின் அரசர் ஏழாம் மங்குநேகரான் பேத்தி ஆவார் அரண்மனைச் சூழலில் வளர்ந்த ஆதிலாவின் நாளங்களில் ஆழமான பண்டைய சாவானிய சம்பிரதாயங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகள் ஊரிக் கிடந்தது.

இருந்த போதிலும், ஒரு பதின்ம வயதுடைய பெண்ணாக, நவீன விளம்பரத் தோற்றம் காட்டல், பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டிய அவர், உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மனியில் மொழி மற்றும் சமகால கலைகளைத் தொடர முடிவு செய்தார். அவர் ஒரு இசை நிறுவனத்தில் பயிற்சி முடித்து, 1980 இல் ஐரோப்பாவில் பல ஆண்டுகளாக சுற்றுப்பயணம் செய்து அங்கு இசை மற்றும் தற்கால நடனக்கலை ஆகியவற்றைப் பயின்றார்.

மேலும் அவர் ஜகார்த்தாவின் சுற்றுலா பள்ளியிலும் (சேகோலா பரிவிசாதா ஜகார்த்தா) பயின்றுள்ளார்.

இசை வாழ்க்கை

[தொகு]

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தலைவர் நூர்டின் முகமது டாப் 2009 ல் சுரகார்த்தா நகரில் மறைந்திருந்த இடத்தில் கொல்லப்பட்ட பின்னர், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சொர்க்கமாக தனது மூதாதையர் ஊரான சோலோ என்றழைக்கப்பட்ட சுரகார்த்தாவை சிங்கப்பூர் செய்தி நிறுவனம் சித்தரித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தியைப் படித்தபோது. [3]  சூர்யத்ஜயா தனது சொந்த ஊரின் பெருமையை மீட்டெடுக்கவும் அவப்பெயரை துடைத்தெறியவும் தீர்மானித்தார். பின்னர் அவர் ஒரு சாவானிய பாலே நாடகமான மாதா அதியை சோலோ நகரின் உண்மையான உருவமாக உலகின் பிற பகுதிகளுக்குக் காண்பிக்கவும், நாடகத்தை சிங்கப்பூரில் நடத்தவும் முடிவு செய்தார், அங்கு உலகளாவிய பார்வையாளர்களை அதிகம் ஈர்க்க முடியும் என்று நம்பிய அவா் மாதா அதி நாடகத்தை 2010 அக்டோபர் 22 முதல் 23 ஆம் தேதி வரை சிங்கப்பூர் எஸ்ப்ளேனேடில் அமைந்துள்ள கச்சேரி அரங்கில் அரங்கேற்றினார். இந்த சாவானிய பாலே நடண பானி சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடந்தேறியது.   அதே அரங்கில் மிஸ் சைகோன் இசை நிகழ்ச்சியைக் கண்டபின் மாதா ஆதியின் யோசனை வந்தது அவருக்கு.. உடனடியாக சோலோவுக்குத் திரும்பி, தனது கனவை நனவாக்க கடுமையாக உழைத்தார். இந்த மதிப்புமிக்க மேடையில் இந்தோனேசியாவின் கலாச்சாரத்தை உயர்த்தினார். மாதா அதிக்கான தயாரிப்பில், நடனக் கலைஞர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் மேடை இசைக்கலைஞர்களுடன் சுரகார்த்தாவில் தனது குழுவுடன் நீண்ட நேரம் பணியாற்றினார், தற்கால தொழில்நுட்பத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாரம்பரிய சாவானிய நடனம் மற்றும் இசையுடன் இணைத்தார். முதல் மங்குநேகரன் மன்னர் ராடென் மாஸ் சாயுடன் முடிச்சுப் போட்டபின், ராடென் ஆயு குசுமா மாதா அதியாக மாறிய ரூபியாவின் வாழ்க்கையைப் பற்றி மாதா அதி நாடகம் கூறுகிறது. மேலும் அவரை ஒரு வலுவான சாவானியப் பெண்ணாகவும் சித்தரித்து இருந்தார். முற்றிலும் சாவானியப் பெண் கலைஞர்கள் 40 பேர் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக ரூபியா இருந்தார். -

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1998 ஆம் ஆண்டில், அவர் இரண்டாவதாக வணிக அதிபர் வில்லியம் சூயரித்ஜயாவின் மகன் எட்வர்ட் சூரியத்ஜயாவை மணந்தார், பின்னர் அவரது வணிகத்திற்கு உதவினார்.

படைப்புகள்

[தொகு]

மேடை நாடகங்கள்

[தொகு]
  • 2012: மாதா அதி
  • 2013: அரியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Atilah Soeryadjaya, Putri Keraton Go Internasional". Tempo. பார்க்கப்பட்ட நாள் 2015-07-05.
  2. https://www.thejakartapost.com/news/2013/06/23/atilah-soeryadjaja-heart-her-art.html
  3. "Colossal Exquisiteness". Forbes Indonesia. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிலா_சூர்யத்ஜயா&oldid=3542643" இலிருந்து மீள்விக்கப்பட்டது