உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதியா கல்விச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதியா கல்விச் சங்கம் (Adhya Educational Society) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற கல்வி அமைப்பாகும். [1] ஆதியா அகாடமி மற்றும் கிஃப்ட் காம்பாசன் திட்டம் என்ற குழந்தைகளுக்கான வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம், ஆதியா கல்விச் சங்கம் அறிவியல் கல்வி, கணிதக் கல்வி மற்றும் மொழி மேம்பாடு ஆகியவற்றில் புதுமையான கற்பித்தல் [2] மூலம் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆதரவையும் கல்வியையும் அளிக்கிறது. [3] 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 முதல் 18 ஆம் தேதி வரை கோவாவில் நடந்த ஒளி விழாவின் கதை என்ற நிகழ்ச்சியில் ஆதியா கல்விச் சங்கம் பங்கேற்றது. [4]

கருணை பரிசுத் திட்டம்[தொகு]

கருணை பரிசுத் திட்டம் [5] [6] என்பது ஆதியா கல்விச் சங்கத்தின் விழிப்புணர்வுத் திட்டமாகும். [7] சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தை தயாரித்த ஒரு சிறிய பரிசை இத்திட்டம் மற்றொரு சமூகம் மற்றும் பின்னணியில் உள்ள பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் போன்ற மற்றொருவருடன் பரிமாறிக்கொள்வதன் மூலம் அவர்களிடையே ஒருவருக்கொருவர் கருணை, நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் பாலத்தை உருவாக்குகிறது. [8] இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2012 ஆம் ஆண்டில் 10,000 குழந்தைகளும், 2013 ஆம் ஆண்டில் 15,000 குழந்தைகளும் பங்கேற்றனர். 2014 ஆம் ஆண்டிற்கு கருணை திட்ட பரிசு 25,000 பள்ளி மாணவர்களை சென்றடைய திட்டமிடப்பட்டது. [9] ஆதியா 2015 ஆம் ஆண்டு சனவரி 31 ஆம் தேதியன்று ஐதராபாத் நகரத்தில் ஒளி விழாவின் கதை 'என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. [10] [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "When School Is Not Enough". newindianexpress.com. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.
  2. "Throwing Light on Art". indianexpress.com. 5 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  3. "LEARNING ANEW AT INSPIRED". metroindia.com/. Archived from the original on 2015-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02.
  4. "A Spectacle". thestoryoflight.org. The Story of Light Festival. Archived from the original on 1 February 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
  5. "Kids chip in for a social cause". The Hans India. 2013-10-04. 
  6. "Kids chip in for a social cause". Eenadu. 2013-10-03. 
  7. "Little acts of kindness set to spread across the country". timesofindia.indiatimes.com. 8 September 2013. 
  8. "Been to Buddy School?". thehindu.com. 17 May 2014. 
  9. "Science education program to reach 25,000 school children". The Hans India. 2014-06-03. 
  10. "Viday Vyavastha Lo Samula Marpul Raavali". 2015-02-01. 
  11. "The Story of Light festival". 2015-02-01. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதியா_கல்விச்_சங்கம்&oldid=3746086" இலிருந்து மீள்விக்கப்பட்டது