ஆதித்ய பூசண் பந்த்
ஆதித்ய பூசண் பந்த் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துறை | |
பணியிடங்கள் |
|
அறியப்படுவது | வளர்ச்சி நச்சுயியல், பூச்சிக்கொல்லிகள் பற்றிய ஆய்வுகள் |
விருதுகள் |
|
ஆதித்ய பூசண் பந்த் (Aditya Bhushan Pant) இவர் ஓர் இந்திய நச்சுயியலாளரும், நரம்பியல் நிபுணரும் மற்றும் இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும் ஆவார். [1] வளர்ச்சி நச்சுயியல், செயற்கை கல முறை பரிசோதனைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகிய துறைகளில் தனது ஆய்வுகளுக்காக அறியப்பட்ட இவர் , உயிரி தொழில்நுட்பத் துறையின் நியூரோபயாலஜி பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். [2] இவரது ஆய்வுகள் பல கட்டுரைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விஞ்ஞான கட்டுரைகளின் இணையக் களஞ்சியமான ரிசர்ச் கேட் அவற்றில் 121 ஐ பட்டியலிட்டுள்ளது. [3] இதைத் தவிர, இவர் மற்றவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு அத்தியாயங்களை வழங்கியுள்ளார் மேலும் இந்திய நரம்பியல் அகாடமியின் அன்னல்ஸ் ஆஃப் நியூரோ சயின்சஸ் என்ற இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். [4] இவர் 2007ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் சகுந்தலா அமீர் சந்த் பரிசைப் பெற்றுள்ளார். [5] இந்திய அரசாங்கத்தின் பயோடெக்னாலஜி திணைக்களம் 2012ஆம் ஆண்டில் உயிரியலுக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக, மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான தொழில் மேம்பாட்டுக்கான தேசிய பயோசயின்ஸ் விருதை இவருக்கு வழங்கியது. [6]
குறிப்புகள்[தொகு]
- ↑ "The Staff". iitrindia.org. 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
- ↑ "Dr. Aditya Bhushan Pant - DBT Neurobiology Task force". dbt-neuro.ncbs.res.in (in ஆங்கிலம்). 2018-02-03. Archived from the original on 3 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
- ↑ "On ResearchGate". On ResearchGate. 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
- ↑ "Annals of Neurosciences". Karger. 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
- ↑ "Shakuntala Amir Chand Prize" (PDF). Indian Council of Medical Research. 2018-02-03. Archived from the original (PDF) on 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
- ↑ "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
வெளி இணைப்புகள்[தொகு]
- Shahriyari, Leili; Komarova, Natalia L.; Aditya Bhushan (2013-10-29). "Symmetric vs. Asymmetric Stem Cell Divisions: An Adaptation against Cancer? (Fullf text)" (in en). PLOS ONE 8 (10): e76195. doi:10.1371/journal.pone.0076195. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0076195.