ஆதிகொண்டனள்ளி
ஆதிகொண்டனள்ளி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°48′43″N 77°45′01″E / 12.8120700°N 77.750390°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
வட்டம் | ஆனேகல் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,354 |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560099 |
தொலைபேசி குறீயீடு | 080 |
வாகனப் பதிவு | ka-51 |
அருகில் உள்ள பெரிய நகரம் | பெங்களூர் |
குடிமை முகமை | கிராம ஊராட்சி |
ஆதிகொண்டனஹள்ளி (Adigondanahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊருக்கு அருகில் உள்ள நகரம் 5 கி.மீ. தொலைவில் உள்ள உள்ள அத்திபள்ளி ஆகும். இந்த சிற்றூரானது பாண்டவர்களால் கட்டப்பட்டதாக மக்களால் நம்பப்படும் புகழ்பெற்ற சிவன் கோயிலுக்காக அறியப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 176.73 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 324 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,354 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 678 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 676 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.32% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73.96% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 62.68% என்றும் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Adigondanahalli Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.