உள்ளடக்கத்துக்குச் செல்

ஆணித் தள்ளுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆணித் தள்ளுகை அல்லது குழலாசன அழுத்தம் (ஆங்கிலம்: Bolt thrust, breech pressure) என்பது, எறியம் சுடப்படுகையில், உந்து வாயுக்களால், இயங்குமுறையின் ஆணி அல்லது குழலாசனத்தின் மீது செலுத்தப்படும் பின்னோக்கிய விசையின் அளவை விவரிக்கும் ஒரு சொல் ஆகும். இச்சொல் அக எறியியல் மற்றும் (சிறிய ரக அல்லது பீரங்கி ரக) சுடுகலன்களில் பிரயோக்கிக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் விசை ஆனது, அளவும் (Magnitude), திசையும் கொண்டிருப்பதால்; இது ஒரு திசையன் பொருள் ஆகிறது.

ஆயுத வடிவமைப்பில் ஆணித் தள்ளுகை ஒரு முக்கிய காரணி ஆகும். எந்த அளவிற்கு ஆணித் தள்ளுகை அதிகம் ஆகிறதோ, அந்த அளவை தாக்குப்பிடிக்கும் வலிமையை பூட்டும் இயங்குநுட்பம் கொண்டிருக்க வேண்டும். 

பின்னுதைப்பின் அளவை கண்டறிய, ஆணித் தள்ளுகை பயன்படாது.

ஆணித் தள்ளுகை கணிப்பு 

[தொகு]

அடிப்படையான கணிதத்தால், ஒரு குறிப்பிட்ட வெடிபொதியின் ஆணித் தள்ளுகையை துல்லியமாக கணக்கிடலாம்.

சூத்திரம் 

[தொகு]
[1]

இங்கே:

பொதியுறைத் தலைகளும், அறைகளும் பொதுவாக வட்டமாக இருக்கும். ஒரு வட்டத்தின் பரப்பளவு:

 

இங்கே:

  • π ≈ 3.1416
  • r = வட்டத்தின் ஆரையம்

இதையே, வட்டத்தின் விட்டம் d-ஐ கொண்டு எழுதினால் 

பச்சைக் கோடு ஆனது, பொதியுறைத் தலையின் உள் விட்டத்தை குறிக்கும். செந்நிறக் கோடு ஆனது, பொதியுறைத் தலையின் வெளி விட்டத்தை குறிக்கும்.  

இதில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொதியுறையை சேதமாக்காமல், அதன் தலையின் உள் விட்டத்தை அளப்பது அவ்வளவு எளிதல்ல. 

ஆணித் தள்ளுகையை உத்தேசிப்பதற்கான செயல்முறை 

[தொகு]

பொதியுறைத் தலையின் உள் விட்டத்திற்கு பதிலாக, அதன் வெளி விட்டத்தை இடுக்குமானி அல்லது திருகு அளவி போன்றவற்றைக் கொண்டு அளந்து, ஆணித் தள்ளுகையை கணிக்க பிரயோகிக்கலாம்.

அடிப்படையான கணக்கிடும் முறை கிட்டத்தட்ட ஒன்று தான், ஆனால் இப்போது சிறிய உள் பரப்பளவுக்கு பதிலாக, அதைவிட பெரிய வெளிப் பரப்பளவை கணக்கில் வைத்தால், 

இங்கே:

  • Fbolt = ஆணித் தள்ளுகை அளவு
  • Pmax = வெடிபொதியால் அறையில் ஏற்படும் உச்சபட்ச அழுத்தம் 
  • Aexternal = பொதியுறைத் தலையின் வெளிப் பரப்பளவு

பல்வேறு கைத்துப்பாக்கி/சுழல்-கைத்துப்பாக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள் 

[தொகு]
வெடிபொதிகள் P1 விட்டம் (மிமீ) Aexternal (செமீ2) Pmax (பார்) Fbolt (கிலோகிராம்-விசை) Fbolt
.22 லாங் ரைஃபிள் 5.74 0.2587 1,650 427 4,268 N (959 lbf)
9×19 மிமீ பாராபெல்லம் 9.93 0.7744 2,350 1,820 17,847 N (4,012 lbf)
.357 எஸ்.ஐ.ஜி. 10.77 0.9110 3,050 2,779 27,248 N (6,126 lbf)
.380 ஏ.சி.பீ. 9.70 0.7390 1,500 1,130 11,085 N (2,492 lbf)
.40 எஸ்&டபள்யூ 10.77 0.9110 2,250 2,050 20,101 N (4,519 lbf)
10 மிமீ ஆட்டோ 10.81 0.9178 2,300 2,111 20,701 N (4,654 lbf)
.45 ஏ.சி.பீ. 12.09 1.1671 1,300 1,517 14,879 N (3,345 lbf)
.454 காசல் 12.13 1.1556 3,900 4,507 44,197 N (9,936 lbf)
.500 எஸ்&டபள்யூ மேக்னம் 13.46 1.4229 4,270 6,076 59,584 N (13,395 lbf)

P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்  

பல்வேறு புரிதுமுக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள் 

[தொகு]
வெடிபொதிகள் P1 விட்டம் (மிமீ) Aexternal (செமீ2) Pmax (பார்) Fbolt (கிலோகிராம்-விசை) Fbolt
5.45×39மிமீ 10.00 0.7854 3,800 2,985 29,268 N (6,580 lbf)
.223 ரெமிங்டன் 9.58 0.7208 4,300 3,099 30,396 N (6,833 lbf)
7.62×39மிமீ 11.35 1.0118 3,550 3,592 35,223 N (7,918 lbf)
.303 பிரித்தானிய 11.68 1.0715 3,650 3,911 38,352 N (8,622 lbf)
7.92×57மிமீ மௌஸர் 11.97 1.1197 3,900 4,367 42,824 N (9,627 lbf)
7.65×53மிமீ மௌஸர் / 7×57mm 12.01 1.1329 3,900 4,418 43,327 N (9,740 lbf)
6.5×55mm 12.20 1.1690 3,800 4,442 43,563 N (9,793 lbf)
.30-06 ஸ்ப்ரிங்ஃபீல்டு / .308 வின்செஸ்டர் 11.96 1.1234 4,150 4,662 45,722 N (10,279 lbf)
7.62×54மிமீ ஆர் 12.37 1.2018 3,900 4,687 45,964 N (10,333 lbf)
8mm Lebel 13.77 1.4892 3,200 4,765 46,734 N (10,506 lbf)
7.5×55மிமீ சுவிஸ் ஜி.பீ. 11 12.64 1.2548 3,800 4,768 46,761 N (10,512 lbf)
.375 ஹாலாந்து & ஹாலாந்து மேக்னம் / .300 வின்செஸ்டர் மேக்னம் 13.03 1.3335 4,300 5,734 56,230 N (12,640 lbf)
.300 வின்செஸ்டர் ஷார்ட் மேக்னம் 14.12 1.5659 4,400 6,890 67,567 N (15,190 lbf)
.300 ரெமிங்டன் அல்ட்ரா மேக்னம் 13.97 1.5328 4,400 6,744 66,139 N (14,869 lbf)
.338 லப்புவா மேக்னம் 14.91 1.7460 4,200 7,333 71,914 N (16,167 lbf)
.300 லப்புவா மேக்னம் 14.91 1.7460 4,400 7,807 76,556 N (17,210 lbf)
.50 பி.எம்.ஜி. 20.42 3.2749 3,700 12,117 118,829 N (26,714 lbf)
14.5×114மிமீ 26.95 5.7044 3,600 20,536 201,387 N (45,274 lbf)

P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்

மேற்கோள்கள் 

[தொகு]

புற இணைப்புகள் 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணித்_தள்ளுகை&oldid=3924547" இலிருந்து மீள்விக்கப்பட்டது