உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதீண்டாப்பாளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதீண்டாப்பாளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Magnoliids
வரிசை:
Piperales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Aristolochia

இனங்கள்

Over 500, see text

வேறு பெயர்கள்

Hocquartia Dum.
Holostylis Duch., Ann. Sci. Nat., Bot. sér. 4, 2: 33, t. 5. 1854.
Isotrema Raf. (disputed)

ஆடுதீண்டாப்பாளை (Aristolochia bracteolata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவின. இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைதிருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது.

விளக்கம்

[தொகு]

இது தரையில் படர்ந்து கிடக்கும் சிறு செடியாகும். பருத்தி விளையும் கரிசல் நிலத்தில் பெரிதும் தொல்லைதரும் களையாக இருக்கிறது. கிளைகள் தரைக்கு கீழேயிருக்கும். தண்டில் இருந்து வளரும். இந்தச்செடி தண்டில்லாத வேரிலிருந்து முளைக்கும். இலையின்மேல் நீலவெண்மை நிறமுள்ள பூசு படிந்திருக்கும். பூ ¾ அங்குல நீளம்; இலைக்கணுச் சந்தில் தனித்தனியாக உண்டாகும். இதழ் குழாய் வடிவமான கூட்டிதழ். குழாய்குள்ளே மயிர்கள் உண்டு. அவையெல்லாம் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். கேசரங்கள் 6. சூல் முடிக்கு கீழே சூல்தண்டைச் சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலறை பூவின் மற்ற வுறுப்புகளுக்கு கீழுள்ளது; 6 அறைகளுள்ளது. கனி வெடி கனி. வெடித்த கனி உறிபோலத் தோன்றும். விதைகள் எளிதில் காற்றில் அடித்துக்கொண்டு போகக் கூடியவை.

மகரந்த சேர்க்கை

[தொகு]

இதில் மகரந்தச் சேர்க்கை நடப்பது வினோதமாக இருக்கின்றது. ஒரே பூவில் கேசரமும் சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்கின்றது. சூல் முடி முதலில் பக்குவப்பட்டுவிடுகின்றது. சிறு இதழ்க்குழாய் வழியாக உள்ளே போகும்போது அதிலுள்ள மயிர்கள் கீழ் நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையின்றிப் போகும். உள்ளே போனதும் இதன் உடம்பு சூல்முடியில் படும். இது கொண்டுவந்த மகரந்தம் பக்குவமாக இருக்கின்ற அந்தச் சூல்முடியில் ஒட்டிக்கொள்ளும். ஈ வெளியே வர முயன்றால் மயிர்கள் அதற்கு வழியில் ஈட்டிகள் போல நீட்டிக் கொண்டிருப்பதால் வர முடிவதில்லை. ஆதலால் அது உள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இந்தக் காலத்துக்குள் சூலடியைச் சுற்றியுள்ள மகரந்தப் பைகள் முதிர்ந்து வெடிக்கும். தூள் அங்குச் சுழலும் ஈயினுடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். இதற்குள் முதலில் ஈ நுழைந்ததும் ஏற்பட்ட மகரந்தச் சேர்க்கையால் சூலில் கருத்தரித்தவுடன் இதழ்க் குழாயிலுள்ள மயிர்களெல்லாம் வாடிவிடும். பூவும் நிமிர்ந்திருந்தது சற்று வளையும். இப்போது ஈ வெளிவருவது எளிது. வந்து வேறொரு பூவுக்குப் போகும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை இந்தப் பூவில் நடக்கிறது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  2. தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1, பக்கம் 352
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதீண்டாப்பாளை&oldid=3761801" இலிருந்து மீள்விக்கப்பட்டது