ஆடித் தள்ளுபடி
Appearance
ஆடித் தள்ளுபடி என்பது ஆடி மாதம் தமிழக கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனையைக் குறிக்கும். ஆடி மாதம் பொதுவாக திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பண்டங்களை விற்றுத் தீர்க்கவும் இந்த விற்பனை உத்தி மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த இத்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இது தள்ளுபடி காலம்". Hindu Tamil Thisai. 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.