ஆசுட்ரோசயனைட்டு(Ce)
Appearance
ஆசுட்ரோசயனைட்டு(Ce) Astrocyanite-(Ce) | |
---|---|
கிடைக்கும் இடத்தில் ஆசுட்ரோசயனைட்டு(Ce) | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Cu2(Ce,Nd,La)2(UO2)(CO3)5(OH)2·1.5H2O |
இனங்காணல் | |
நிறம் | நீலம், அடர் நீலம், நீலப் பச்சை |
ஒப்படர்த்தி | 3.8 |
அடர்த்தி | 3.8 |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
ஆசுட்ரோசயனைட்டு(Ce) (Astrocyanite-(Ce)) என்பது Cu2(Ce,Nd,La)2(UO2)(CO3)5(OH)2·1.5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிரகாசமான நீல நிறத்தில் இக்கனிமம் காணப்படுகிறது. காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள உலுவாலாபா மாகாணதின் கோல்வேசி நகரத்திலுள்ள காமோட்டோ சுரங்கத்தில் ஆசுட்ரோசயனைட்டு(Ce) கிடைக்கிறது.
நீலநிறம் மற்றும் நட்சத்திரம் ஆகிய பொருள்களைக் குறிக்கும் பண்டைய கிரேக்க சொல்லிலிருந்து ஆசுட்ரோசயனைட்டு என்ற இக்கனிமத்தின் பெயர் வரப்பெற்றுள்ளது. திரட்சியாகக் காணப்படும் இக்கனிமத்தில் இலந்தனைடு ஆதிக்கம் செலுத்துகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆசுட்ரோசயனைட்டு கனிமத்தை Acy-Ce[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
வெளி இணைப்புகள்
[தொகு]- Astrocyanite-(Ce) data sheet
- About Astrocyanite-(Ce
- Astrocyanite-(Ce) பரணிடப்பட்டது 2019-05-08 at the வந்தவழி இயந்திரம் on the Handbook of Mineralogy