உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் பண் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் ஆசிரியர் பண் ஆசிரியர் நாளான அக்டோபர் 6 ஆம் நாள் அன்று ஆண்டு தோறும் பாடசாலைகளில் ஆசிரியர்களால் மாணவர்களை நோக்கி பாடப்படுவது வழமை. இப்பாடல் முத்து முத்தான சித்திரங்கள் என ஆரம்பிக்கிறது. இப்பாடலில் ஆசிரியர்களின் பணி மற்றும் கடமை பற்றியும் எடுத்துரைக்கிறது. இப்பாடலை பொன். சிறீவாமதேவன் எழுதி இசையமைத்துள்ளார். இவர் புறக்கண் பார்வை அற்றவர்.[1]

ஆசிரியர் பண்

[தொகு]

இலங்கையில் தமிழ்மொழி மூலம் தேசிய ரீதியாக பாடப்படும் ஆசிரியர் கீதம்:

ஆ ஆ ஆ......ஆ ஆ ஆ..........
முத்து முத்தான சித்திரங்கள்
இலங்கை முற்றத்தில் சிந்திய ரத்தினங்கள் (முத்து)
பற்றும் பாசமும் வைத்தவற்றை
நல்ல பாதையில் சேர்க்கும் பணி எமதே! (2)
(முத்து)
அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளி வரும் பிஞ்சு பாலகனாய் (அன்னை)
அவன் தன்னம் தனிமையைப் போக்கிடவே
உள்ளத்தில் நம்பிக்கை அன்பை ஊற்றிடுவோம் :(அவன்)  : (முத்து)
எண்ணும் எழுத்தும் உணர்ந்திடுவோம்
உள்ள தேவைகள் அறிந்து பூர்த்தி செய்வோம் (எண்ணும்)
அவன் ஒழுங்குடன் ஒழுக்கமும் பேணி நல்ல
சிந்தை ஆற்றலை தூண்டிடுவோம்
(அவன்)
(முத்து)
கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
நல்ல கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில் (கற்பித்தல்)
தினம் பெற்ற கடமையை பேணி ஏற்றே
ஞாலம் போற்றும் சமூகத்தை நாம் படைப்போம் (தினம்)
(முத்து)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்_பண்_(இலங்கை)&oldid=4107198" இலிருந்து மீள்விக்கப்பட்டது