ஆசிய நெடுஞ்சாலை 12
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 12 அல்லது ஏஎச்12 (AH12), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசிலுள்ள நாட்டுவே என்னுமிடத்தில் இருந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இன் கொங் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,588 கிலோமீட்டர்.
ஏச்3 ஐ லாவோசின் "நாட்டுவே" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்14 ஐ வெட்டிச் செல்கிறது. ஏஎச்13, ஏஎச்11, ஏஎச்15, ஏஎச்19 ஆகிய சாலைகள் இதனைச் சந்திக்கின்றன.
நாடுகள்[தொகு]
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- லாவோசு - 684 கிமீ
- தாய்லாந்து - 511 கிமீ
உசாத்துணை[தொகு]
- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)