ஆசியா பவுண்டேசன்
ஆசியா பவுண்டேசன் இலாபநோக்கற்ற அரசு அல்லாத அமைப்பாகும். இது ஆசிய பிராந்தியத்தில் அமைதியாக வசதியாக இருப்பதை விருத்தி செய்யும் அமைப்பாகும். டக் பிறீற்றுவர் (Doug Bereuter) இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றுகின்றர்.
இலக்குகள்
[தொகு]இந்த அமைப்பின் நோக்கமானது ஆசியப் பிராந்தியத்தில் ஆட்சி மற்றும் சட்டங்களை மேம்படுத்தல், பொருளாதாரச் சீரமைப்பு, பெண்கள் விருத்தி மற்றும் சர்வதேச விவகார மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது. 50 ஆண்டு கால அநுபவத்தில் இந்த அமைப்பானது அரச மற்றும் தனியார் பங்காளிகளாக் கொண்டு ஆளுமைகளை விருத்தி செய்யவும் கொள்கைகளை விருத்தி செய்து பரிமாறவும் உதவுகின்றது.
உலகளாவிய பிரசன்னம்
[தொகு]ஆசியாவில் 18 அலுவலகங்களுடன் (காபூல், இஸ்லாமபாத், காத்மண்டு, கொழும்பு, டாக்கா, பாங்கொக், கோலாலம்பூர், ஜகார்த்தா, தில்லி, மணிலா, ஹானோய், பினோம்பினே, ஹாங்ஹாங், தாய்பி, பீஜிங், சியோல், ரோக்கியோ மற்றும் உலன் பட்டார்) அத்துடன் வாஷிங்டனிலும் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஆனது சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது பிரச்சினைகளை நாடளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் அலசி ஆராய்கின்றது.
மனிதாபிமான உதவிகள்
[தொகு]2004ஆம் ஆண்டு இந்த அமைப்பானது 72 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான புத்தகங்கள் மற்றும் கல்வி சம்பந்தப் பட்ட உபகரணங்களை ஆசியா முழுவது 28 மில்லியன் பெறுமதியில் வழங்கியது.