ஆக்ரா வங்கி
ஆக்ரா வங்கி (Agra Bank) 1833 ஆம் ஆண்டில் £1,000,000 மூலதனத்துடன் ஆக்ராவில் (இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது) நிறுவப்பட்டது.[1][2] 1900 இல் இவ்வங்கி மூடப்பட்டுவிட்டது.[3]
ஆக்ரா வங்கி
[தொகு]1840 வரையிலும் இவ்வங்கியின் பணியானது இராணுவத்திற்கு முன்பணமளிப்பதாகவே இருந்து வந்தது. பணத்தாள்களைப் புழக்கத்தில் விடுவதை அரசாங்கம் தடைசெய்திருந்ததோடு உள்ளூர் மக்களிடையே பணத்தாட்களுக்கான விருப்பமும் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வங்கியின் கிளையொன்று கொல்கத்தாவில் (சோமர்செட் இடம்) திறக்கப்பட்டது.[4] நடு 1850களின் நடுக்காலத்தில் கொல்கத்தாவிலிருந்த கிளையே இதன் தலைமையகமானது. மேலும் மெட்ராஸ், பம்பாய், நகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டதோடு இலண்டனிலும் ஒரு முகமை ஏற்படுத்தப்பட்டது. லாகூரிலும் கான்டனிலும் கிளைகள் திறக்கப்பட்டு 1850களின் இறுதியில் வங்கியின் தலைமையகம் லண்டனுக்கு மாற்றப்பட்டது.[3]
லண்டன்
[தொகு]ஆக்ரா & யுனைட்டு சர்வீசு வங்கி
[தொகு]1857 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் ஆக்ரா மற்றும் யுனைட்டு சர்வீசு வங்கிகள் இணைக்கப்பட்டுப் அவற்றால் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. எனினும் இலண்டன் வங்கிகளின் தீர்வகநிலையத்துக்குள் நுழைய இயலவில்லை.[5]
ஆக்ரா & மாஸ்டர்மேன் வங்கி
[தொகு]1864 ஆம் ஆண்டு ஜூன் மாதம் "மாஸ்டர்மேன், பீட்டர்ஸ், மில்டிரெட் & நிறுவனத்தின்" லண்டன் வங்கி கூட்டாண்மை மூலம் இலண்டன் வங்கியாளர்களின் தீர்வகநிலைய உறுப்பினராகித் தனது வங்கியின் பெயரை ஆக்ரா & மாஸ்டர்மேன் வங்கி என மாற்றிக்கொண்டது. எனினும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது; பங்கு விலைகளைக் கையாள்வதில் நட்டப்பட்டு வாடிக்கையாளர்களை இழந்தது.[5] 1866 இல் கிழக்கே முன்னணியிலுள்ள பரிமாற்ற வங்கி என்ற நிலைக்கு ஓரியண்டல் வங்கி நிறுவனத்துக்கு அடுத்ததாக உயர்ந்தது..[6] மே 10, 1866 இல் ஒவேரேந்து, குர்னெய் & கூட்டுக்குழுமம் (வங்கியாளர்களின் வங்கி) மூடப்படப்போகிறது என்ற பீதியான செய்தியால், ஆக்ரா & மாஸ்டர்மேன் வங்கி ஜூன் 6, 1866 இல் பணம் வழங்குவதை நிறுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.[3]
ஆக்ரா வங்கி
[தொகு]ஆக்ரா வங்கியின் வணிகத்தின் இந்தியப் பகுதி ஆக்ரா வங்கி என்ற பெயரில் மீளமைக்கப்பட்டு ஜனவரி 7,1867 இல் மீண்டும் திறக்கப்பட்டது.[5] பின்னர் 1900 இல் ஆக்ரா வங்கி மூடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Advent of Modern Banking in India". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 5 February 2023.
- ↑ Money-Market and City Intelligence. The Times Saturday, 11 June 1836 Issue 16127 Page 6
- ↑ 3.0 3.1 3.2 3.3 Stuart Muirhead, Edwin Green. Crisis Banking in the East, Ashgate Publishing, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859282441
- ↑ The Bengal and Agra Annual Guide and Gazetteer, for 1841-: I, II. accessed 27 May 2020
- ↑ 5.0 5.1 5.2 Dennis O. Flynn, A.J.H. Latham, Sally M. Miller (editors). Studies in the Economic History of the Pacific Rim Routledge, London 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0203065352
- ↑ Compton Mackenzie. Realms of Silver:100 years of banking in the East