ஆகாஷ் விஜய்வர்கியா
ஆகாஷ் விஜய்வர்கியா | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 2018 | |
முன்னையவர் | உஷா தாகூர் |
தொகுதி | இந்தோர் -3 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 செப்டம்பர் 1984[1] |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 880/9, நந்தன் நகர், இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | http://akashvijayvargiya.com |
ஆகாஷ் விஜய்வர்கியா (Akash Vijayvargiya) மத்தியப் பிரதேசத்தின் இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[2] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், ஆகாஷ் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவருமான அஷ்வின் ஜோஷியை 5700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.[3] இவர் 'தேவ் சே மகாதேவ்' என்ற ஆன்மீக ஊக்க புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ராம்தேவ் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மூத்த மகன் ஆவார்.[4]
சர்ச்சைகள்
[தொகு]26 ஜூன் 2019 அன்று, அரசு ஊழியர் ஒருவரை துடுப்பாட்ட மட்டையால் அடித்ததற்காக இவர் செய்திகளில் இடம் பெற்றார். இது இவரது சொந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.[5] காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இவர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akash Vijayvargiya". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ एजेंसी (11 December 2018). "वरिष्ठ कांग्रेस नेता को बीजेपी के सचिव कैलाश विजयवर्गीय के बेटे ने दी चुनावी शिकस्त". Abpnews.abplive.in. Archived from the original on 18 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 12 December 2018. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ "आकाश विजयवर्गीय कड़े मुकाबले में फंसे, कैलाश बोले- जीतेगा तो मेरा बेटti ही". Nai Dunia. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
- ↑ "Case registered against BJP MLA Akash Vijayvargiya for beating up officer" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/india/story/after-beating-up-officer-with-bat-akash-vijayvargiya-says-dana-dan-is-our-line-of-action-1556472-2019-06-26.