அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து
| |
---|---|
பிறப்பு | ஜூன் 2 [1] |
கல்வி | எஸ். எஸ். என் பொறியியல் கல்லூரி (பி. இ.) [2] |
தொழில்கள் |
|
இயங்கி வரும் ஆண்டுகள் | 2020-தற்போது வரை |
அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது தமிழ்த் திரைப்படமான டிராகன் 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது.
தொழில் வாழ்க்கை
[தொகு]அஸ்வத் 2020 ஆம் ஆண்டில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே, அதன் புதுமையான கதைக்களத்திற்காக பாராட்டுகளைப் பெற்றது. படத்தின் வெற்றி அஷ்வத்தை இத்திரைப்படத்தை தெலுங்கில் ஓரி தேவுதா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்ய வைத்தது.
2024 ஆம் ஆண்டில், அஸ்வத் தனது அடுத்த திரைப்படத்தை இயக்குநர்-நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் என்ற பெயரில் அறிவித்தார். அஸ்வத் மற்றும் பிரதீப் பதின்ம ஆண்டு காலத்திற்கும் மேலாக நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.[3] டிராகன் 2025 ஆம் ஆண்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக மாறியது. சிலம்பரசன் நடிக்கும் அஸ்வத்தின் மூன்றாவது தமிழ் திரைப்படம் தற்போது தயாரிப்பில் உள்ளது.
திரைப்பட உருவாக்க பாணி
[தொகு]பிராங்க் காப்ராவின் இட்ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப் (1946) என்ற திரைப்படத்தை இவர் மீது ஆதிக்கம் செலுத்திய படங்களில் ஒன்றாக அஸ்வத் கருதுகிறார், மேலும் இவரது அனைத்துப் படங்களிலும் உத்வேகம் தரும் கருப்பொருளைப் பின்பற்ற முயற்சிக்கிறார்.[4]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | தலைப்பு | இயக்குநர் | எழுத்தாளர் | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|
2020 | ஓ மை கடவுளே | ஆம் | ஆம் | [5] | |
2022 | ஓரி தேவுத | ஆம் | ஆம் | ஓ மை கடவுளேயை அடிப்படையாகக் கொண்ட தெலுங்கு படம் | [6] |
2025 | டிராகன் | ஆம் | ஆம் | கேமியோ | [7] |
விருதுகளும் அங்கீகாரமும்
[தொகு]ஆண்டு | விருது வழங்கும் விழா | திரைப்படம் | வகை | விளைவு |
---|---|---|---|---|
2020 | 20வது சந்தோஷ் திரைப்பட விருதுகள் | சிறந்த இயக்குநர்-தமிழ் | ஓ மை கடவுளே | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AGS Entertainment [@Ags_production] (June 2, 2024). "Wishing our super talented director @Dir_Ashwath a very happy birthday!!! Keep shining and growing in cinema always ❤️" (Tweet) – via Twitter.
- ↑ "Alumni".
- ↑ "Ashwath Marimuthu clarifies if his film with Pradeep Ranganathan was supposed to star Silambarasan". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-04-12. Retrieved 2024-07-12.
- ↑ Vishal Menon (20 February 2025). "Director Ashwath Marimuthu Talks About the High Stakes of 'Dragon'". The Hollywood Reporter India.
- ↑ "Ashwath Marimuthu clarifies if his film with Pradeep Ranganathan was supposed to star Silambarasan". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-04-12. Retrieved 2024-07-12.
- ↑ Dundoo, Sangeetha Devi (2022-10-12). "Why Venkatesh was godsent for ‘Ori Devuda’s director Ashwath Marimuthu, whose romance drama stars Vishwak Sen and Mithila Palkar" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/why-venkatesh-was-godsent-for-ori-devudas-director-ashwath-marimuthu/article65992236.ece.
- ↑ "Pradeep Ranganathan's next with Ashwath Marimuthu titled 'Dragon'". The Times of India. 2024-05-05. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pradeep-ranganathans-next-with-ashwath-marimuthu-titled-dragon/articleshow/109859721.cms.