அவியனூர்
அவியனூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 55.56 m (182.28 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,637 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 607101[1] |
புறநகர்ப் பகுதிகள் | திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், ஒறையூர் |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | பண்ருட்டி |
அவியனூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] அவியனூர் பகுதியானது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.[3]
அமைவிடம்
[தொகு]அவியனூர் பகுதியானது, 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி, அவியனூர் பகுதியின் மக்கள்தொகை 1,637 ஆகும். இதில் 829 பேர் ஆண்கள் மற்றும் 808 பேர் பெண்கள் ஆவர்.[4]
கல்வெட்டுகள்
[தொகு]அவியனூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.[5] இதன் மூலம் அவியனூர் பகுதியானது வரலாற்றுத் தொடர்புடையது என்று தெரிய வருகிறது. முதலாம் பராந்தக சோழன் என்ற மதுரை கொண்ட கோப்பரகேசரி சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும் அவியனூர் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளது.[6][7]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]அவியனூரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அஷ்டமூர்த்தீஸ்வரர் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று உள்ளது.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aviyanur Pin Code - 607101, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ Karai Rajan (1997). Archaeological Gazetteer of Tamil Nadu (in ஆங்கிலம்). Manoo Pathippakam.
- ↑ "Taluk Information". web.archive.org. 2013-10-21. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ "Aviyanur Village Population - Panruti - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ DIN (2024-09-11). "முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ Archæological Survey of India (1997). Indian Archaeology (in ஆங்கிலம்). Archaeological Survey of India, Government of India.
- ↑ Archæological Survey of India (1998). Annual Report on Indian Epigraphy for ... (in ஆங்கிலம்). Manager of Publications.
- ↑ "Arulmigu Ashtamoortheeswararattached Withkothandaramasamy Temple, Aviyanur - 607101, Cuddalore District [TM020982].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ lightuptemple (2020-11-17). "Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur". lightuptemples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.