உள்ளடக்கத்துக்குச் செல்

அல் உம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் உம்மா (Al Ummah) என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டது. இது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.[1] இது 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பை நடத்தியது.[2]

வரலாறு

[தொகு]

அல் உம்மா இயக்கமானது பாபர் மசூதி இடிப்பு நிகழ்விற்குப் பின் சையது அஹமது பாட்ஷா மற்றும் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.[3] இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆவார்.[சான்று தேவை] இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகும்.[1] 1993 ஆம் ஆண்டில் சென்னையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.[1] பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.[4] இத்திட்டத்தினால் கோவையில் 18 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.[5] விமானம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார். மேலும் அல் உம்மா இயக்கம் 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 T.S. SUBRAMANIAN (March 1998). "A time of troubles". Front line. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  2. http://www.frontline.in/static/html/fl1505/15050090.htm
  3. "Terror arrests point to rise of Al Ummah". Deccan chronicle. 24 April 2013. Archived from the original on 2013-05-14. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  4. "Probe confirms plot to kill Advani". The Tribune. May 19, 2000. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  5. JOHN F. BURNS (February 16, 1998). "Toll From Bombing in India Rises to 50 Dead and 200 Hurt". NYTimes. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  6. "Al Ummah man planted bomb near BJP office in Bangalore, say cops". The Indian Express. 7 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_உம்மா&oldid=3541785" இலிருந்து மீள்விக்கப்பட்டது