உள்ளடக்கத்துக்குச் செல்

அல்போர்சு மாகாணம்

ஆள்கூறுகள்: 35°29′N 50°35′E / 35.48°N 50.58°E / 35.48; 50.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போர்சு மாகாணம்
Ostāne Alborz
Map of Iran with Alborz highlighted
Alborz counties
Map of Iran with Alborz highlighted
Location of Alborz within Iran
ஆள்கூறுகள்: 35°29′N 50°35′E / 35.48°N 50.58°E / 35.48; 50.58
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ஈரான்
Regions of IranRegions of Iran
தலைநகரம்கரஜ்
Counties of Iran6
பரப்பளவு
 • மொத்தம்5,833 km2 (2,252 sq mi)
மக்கள்தொகை
 (2016)[1]
 • மொத்தம்27,12,400
 • அடர்த்தி470/km2 (1,200/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRDT)
இடக் குறியீடு026
Languages of Iranபாரசீக மொழி
Alborz Province Historical population
ஆண்டும.தொ.±%
201124,12,513—    
201627,12,400+12.4%
amar.org.ir

அல்போர்சு மாகாணம் (Alborz Province) (பாரசீக மொழி: Ostāne Alborz‎, Ostan-e Alborz ) என்பது ஈரான் நாட்டினுடைய, 31 மாகாணங்களில் அடங்கும் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம், கரஜ் என்ற நகரமாகும்.[2] ஜூன் 23, 2010 அன்று ஈரான் பாராளுமன்றம் அளித்த ஒப்புதலுக்குப் பிறகு, தெகுரான் மாகாணத்தை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.[2] 2014 ஆம் ஆண்டு ஈரானின் பகுதிகளில் ஒன்றாக, ஈரான் பகுதி-1 என அறிவிக்கப் பட்டது.[3]தெகுரான் நகருக்கு, வடமேற்கே அமைந்துள்ள, இந்த மாகாணத்தில் 6 மாவட்டங்கள் உள்ளன, கராஜ் கவுண்டி, சவோஜ்போலாக் கவுண்டி, தலேகான் கவுண்டி, எஷ்டேஹார்ட் கவுண்டி, ஃபார்டிஸ் கவுண்டி, நாசராபாத் கவுண்டி ஆகிய ஆறு பெயர்கள், இம்மாகாணத்தின், ஆறு உள் மாவட்டங்கள் ஆகும்.[4]தெhdரான் நகரிலிருந்து, மேற்கே 35 கி.மீ. தொலைவில், அல்போர்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில், இந்த மாகாணம் அமைந்துள்ளது. ஈரானின் முப்பத்தொறு மாகாணங்களிலேயே இந்த மாகாணம் தான்,மிகச்சிறிய மாகாணமாகும். ஈரான் நாட்டின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டில் அல்போர்சு மாகாணத்தின் மக்கள் தொகை 2,412,513 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில், 90,5% மக்கள், இம்மாகாணத்தின் நகர்ப்புறங்களில் வசித்து வந்தனர்.[5]

முக்கிய நகரங்கள்

[தொகு]

சவோஜ்போலாக்

[தொகு]

சவோஜ்போலாக் கவுண்டி அல்லது சவோஜ்போலாக் மாவட்டத்தின் தலைநகரமாக ஆசெட்கெர்டு(Hashtgerd) என்ற நகரம் உள்ளது. இது தெகுரான் நகரத்தில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஏசுகர்டு நகருக்கு அருகில், பல தொல்பொருள் மேடுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும், கூட்டாக "ஓசுபாக்கி" என்று அழைக்கப்படுகின்றன. பல பத்தாண்டுகளாகத் தீவிரமாக தோண்டப்பட்ட, இந்த இடங்களில், தோசன் தபே உட்பட, பல மேடுகள் அல்லது "டெப்சு" ஆகியவை அடங்கியுள்ளன. கிமு 7 ஆம் மில்லினியம் முதல், கிமு 1400 வரையிலான, பழங்கால குடியேற்றங்களின் எச்சங்கள், ஓசுபாக்கியில் காண இயலும். இந்த குடியிருப்புகளில் "சாம்பல் மண் பாண்டம்" ஆரியர்களும், மீடியர்களும் வசிக்கின்றனர். சிலை பூங்கா என்று அழைக்கப்படும் ஒரு பூங்கா என்பது, ஆசெட்கெர்டில் ஒரு பச்சை மிகுந்த பள்ளத்தாக்கு பகுதியாகும். இந்த பூங்காவில், வெவ்வேறு ஈரானிய கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட, குறிப்பிடத்தக்க ஈரானியர்களின் 12 பஸ்ட்கள்(busts) காணப்படுகின்றன.

தலேகான்

[தொகு]

தலேகான் கவுண்டி அல்லது சதலேகான் மாவட்டத்தின் தலைநகரமாக, தலேகான் என்ற நகரம் உள்ளது. இந்நகரமானது, அல்போர்சு மலைத்தொடரில் அமைந்துள்ளது. தலேகானைச் சேர்ந்த பூர்வீக மக்களின் பேசும் மொழியானது, டாட்டி மொழி என்ற ஈரானின் பழைய மொழிகளில் ஒன்றாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை, அங்கிருக்கும் மொத்த 988 குடும்பங்களில், 3,281 நபர்கள் வாழ்ந்து வந்தனர்.[6]

நாசராபாத்து

[தொகு]

நாசராபாத்து கவுண்டி அல்லது நாசராபாத்து மாவட்டத்தின் தலைநகரமாக, நாசராபாத்து என்ற நகரம் உள்ளது. 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 24,583 குடும்பங்களில் 97,684 ஆக இருந்தது.[6]

பிற நகரங்கள்

[தொகு]

பர்டீசு நகரமும், இசுட்டாகர்டு நகரமும் குறிப்பிடத்தகுந்த ஈரானின் பழமைகளைப் பெற்றுள்ளது. இசுட்டாகர்டு(Eshtehard) நகரில், 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,813 குடும்பங்களில் வாழ்ந்து, அவர்களின் மொத்த மக்கள் தொகை 25,000 ஆக இருந்தது.[6] இந்த நகரத்தின் முக்கிய இடமாக, "எஷ்டேஹார்ட்டின் தொழில்துறை பூங்கா"வும், "பயாம் நூர் பல்கலைக்கழகமும்" ஆகும். இந்த நகர மக்கள் டாட் ஈரான் நாட்டின் பரம்பரை வரலாறுகளைப் பெற்றுள்ள மக்களான டாட் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்களின் பேசு மொழியாக, டாட்டி மொழி உள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National census 2016". amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.
  2. 2.0 2.1 Majlis extends term of councils, votes for new province, Tehran Times, பார்க்கப்பட்ட நாள்:12நவம்2019.
  3. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  4. MPs vote for new province of Alborz பரணிடப்பட்டது 2010-06-25 at the வந்தவழி இயந்திரம், Khabaronline, Retrieved on 24 June 2010. (Persian)
  5. Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 2013-05-31 at the வந்தவழி இயந்திரம்
  6. 6.0 6.1 6.2 "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. Stilo, Donald L. (2 January 2007). "The Tati language group in the sociolinguistic context of Northwestern Iran and Transcaucasia". Iranian Studies 14 (3-4): 137–187. doi:10.1080/00210868108701585. 
  8. Yar-Shater, Ehsan (1969). A grammar of southern Tati dialects. Mouton. {{cite book}}: Invalid |ref=harv (help)
  9. Tats of Iran and Caucasus, Ali Abdoli, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போர்சு_மாகாணம்&oldid=3069934" இலிருந்து மீள்விக்கப்பட்டது