அலைகளும் அவற்றின் பயன்களும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அலைகள்
[தொகு]சக்தி ஊடுகடத்தப்படும் ஒரு நுட்பம் அலை இயக்கமாகும். அதாவது அலைகள் பயணிக்கும் போது ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு அதனுடன் சக்தியும் பயணிக்கின்றது.
அலைகளின் வகைகள்
[தொகு]- அலைகள் உருவாகும் முறைகளின் அடிப்படையில் பொறிமுறையலைகள், மின்காந்த அலைகள் எனப் பிரிக்கப்படுகின்றன.
- அலைகள் பயணிக்கும் முறையின் அடிப்படையில் குறுக்கலைகள், நீள்பக்க அலைகள் எனப்பிரிக்கப்படுகின்றன.
பொறிமுறையலைகள்
[தொகு]சடப்பொருட்களின் அதிர்வு காரணமாக உருவாகும் அலைகள் பொறிமுறையலைகள் எனப்படும்.
உதாரணம் : ஒலியலைகள், கடலலைகள், சுனாமியலை.
அதிர்வு
[தொகு]ஒரு பொருள் அல்லது தொகுதி தனது ஆரம்ப நிலையில் இருந்து இருபுறமும் சென்று வரும் ஒழுங்கான செயற்பாடு அதிர்வு எனப்படும். உதாரணம்: அடிமட்டம் ஒன்றை மேசையின் ஓரத்தில் வைத்து தட்டுதல்
மின்காந்த அலைகள்
[தொகு]மின்னேற்றங்களின் அதிர்வினால் அல்லது அவை ஆர்முடுகுவதால் உருவாகும் மின்னின் இயல்புகளையும் காந்தத்தின் இயல்புகளையும் கொண்ட அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும். உதாரணம் :- ஒளியலைகள், எக்ஸ் கதிர், வானொலி அலைகள்.
நெட்டாங்கலைகள்
[தொகு]அலைகள் பயணிக்கும் போது ஊடகத்தின் துணிக்கைகள் அதனுடன் சேர்ந்து இயங்குமாயின் அது நெடுக்கலை அல்லது நெட்டாங்கலை எனப்படும்.
உதாரணம் வளியில் ஒலியலைகள் பயணிப்பதைக் குறிக்கும். நெட்டாங்கலைகள் பயணிக்கும் போது செருக்கலும் ஐதாக்கலும் ஏற்படும்.அலை செல்லும் போது ஊடகத்தின் துணிக்கைகள் நெருக்கலுக்கும் ஐதாக்கலுக்கும் உட்படும்.
குறுக்கலைகள்
[தொகு]அலைகள் பயணிக்கும் போது ஊடகத்தின் துணிக்கைகள் செங்குத்தாக அசையுமாயின் அது குறுக்கலையாகும். உதாரணம் :நீரில் தோன்றும் அலைகளின் இயக்கம், மின்காந்த அலைகள் செல்லும் போது குறுக்கலை வடிவிலேயே பயணிக்கும். குறுக்கலைகள் செல்லும் போது முடிகளும் தாழிகளும் உருவாகும்.
அலைகளின் இயக்கத்தின் போது அலைவு காலம், மீடிறன், வீச்சம், அலைநீளம், வேகம் என்பன அமையும்.