உள்ளடக்கத்துக்குச் செல்

அலைகயலுருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலைகயலுருக்கள் (அலைக்கயலுரு - ஒருமை) (Ichthyoplankton) என்பது கடல்நீர் மட்டத்திற்கு ஒட்டிய அல்லது நீர்பரப்பின் மேலிருந்து 200 மீ. களுக்குள் இடம்பெற்றுள்ள கயல்களின் உருக்களான மீன்முட்டை மற்றும் மீன்குஞ்சுகளின் பற்றியதாகும். இவைகள் அலை/நீரின் ஓட்டத்தினால் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன. இவை அலைவிலங்குகளுக்குள் அடங்கும். ஆனால் இவைகள் அலைவிலங்களுக்குள் குறைந்த அளவேக் காணப்பட்டாலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை பகுமிதவைவாழிகளாகத் திகழ்கின்றன.

பெயர்க்காரணம்

[தொகு]

அலை - நீரோட்டம்/நீரலை என்பதையும் கயலுருக்கள் - மீனின் உருக்களாகிய மீன்குஞ்சுகள் மற்றும் மீன்முட்டைகளைக் குறிக்கும். மேலும் இவைகளை மீனின் உருப்படிகள் எனவும் பொருள் கொள்ளலாம். அலைகயலுருக்கள் என்பது நீரோட்டத்தால்/நீரின் விசைக்கு ஆட்பட்டு மிதவைவாழிகளைப் போல் இடம் பெயர்கின்றன.

பண்புகள்

[தொகு]

மிதவைவாழிகளில் ஒருச் சிறுத்தொகுதியான அலைக்கயலுருக்கள் என்பது மீனின் உருக்களான முட்டை மற்றும் குஞ்சுகளைச் சார்ந்ததேயாகும்.

இதில் முட்டைகள் நீந்தும் தன்மையற்று இருப்பதால் இவை அலைகள்/நீரின் வேகத்தால் எழுப்பப்பட்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. இவைப் பெரும்பாலும் கடற்பகுதிகளிலேயேக் காணப்படுகின்றன. ஏனெனில் நீரோட்டம் மிகுந்துக் காணப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது.

குஞ்சுகள் ஆரம்ப காலத்தில் நீந்தும் தன்மைக் குறைவாகப் பெற்றும் நீந்தும் தன்மையற்றும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் குஞ்சுகள் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுவதும் இடம் பெயர்வதும் நிகழ்வதுண்டு. ஆனால் காலப்போக்கில் அவை நல்ல நீந்தும் தன்மையுடையதாய் மாறிவிடுகிறது. அப்போது நீரோட்டத்தின் எதிர்விசையில் பயணிக்க நல்ல வலிமையுடையதாய்த் திகழ்கிறது.

உணவுகள்

[தொகு]

இவைகளில் குஞ்சுகள் அலைத்தாவரங்களை உண்கின்றன. இவையே சில சமயங்களில் பெருவிலங்குகளுக்கு உணவாகவும் செயல் படுகின்றன.

முக்கியத்துவம்

[தொகு]
  • இவைகள் சுற்றுச்சூழல் அளக்கும் மானியாகத் திகழ்கிறது. இவைகளால் நீர்ச்சூழல் ஆரோக்கியத்துடனா அல்லது கேடுடன் காணப்படுகிறதா எனபதை நாம் உணர முடியும்.
  • மீன்/கயல்களின் சினை உற்பத்தியையும் அதன் பருவக்காலத்தையும் உணர ஏதுவாய் இருக்கிறது. இதன் மூலம் மீன் உற்பத்தியையும் கணக்கெடுக்கலாம்.

கயலுருக்களை அலப்பதின் மூலம் நாம் பொருள் விரையத்தையும் காலவிரையத்தையும் தவிர்க்கலாம். பெரிய மீன்களை மாதிரிக்கொண்டு ஆய்வதைவிட இச்சிரு குஞ்சுகளையும் முட்டைகளையும் ஆய்வதில் எளிமையாக வேலையைக் கையால முடியும். இதைக் கொண்டு நாம் பெருமீன்களின் கணக்கையும் எளிதாக உணரமுடியும்.

  • இதனால் அறியப்படும் தரவுகளானது மீனின் பரவல் மற்றும் அடர்த்தியையும் அதன் தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தெளிவாக உணர வாய்ப்பளிக்கிறது.
  • மீன்களில் குறிப்பிடும் படியாக மத்தி, நெத்திலி ஆகிய மீன்களின் தொகைகளைக் கணக்கெடுக்கப் பெரிதும் பயன்படுகிறது. பசிபிக் மத்தி மற்றும் பசிபிக் ஐலாக்களையறியவும் மேலும் போகாக்சியோ, கனவாய், கௌகாட் பாறைமீன்களை போன்று பலமீன்களின் பருவமாற்றம் மற்றும் சூழ்லியல் குறித்து அறியமுடியும்.

காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைகயலுருக்கள்&oldid=2762171" இலிருந்து மீள்விக்கப்பட்டது