உள்ளடக்கத்துக்குச் செல்

அலீயெட் டி பொடார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலீயெட் டி பொடார்ட் (Aliette de Bodard) ஒரு பிரெஞ்சு ஊகப்புனைவு எழுத்தாளர். பெண் எழுத்தாளரான இவர் ஒரு தொழில்முறை மென்பொருளாளர். அமெரிக்காவில் பிரெஞ்சு-வியட்நாமிய பெற்றோருக்குப் பிறந்த அலீயெட், தற்சமயம் பாரிசில் வசிக்கிறார். பிரெஞ்சு அவரது தாய்மொழியாக இருந்தாலும் ஆங்கிலத்தின் தனது புனைவுப் படைப்புகளை எழுதி வருகிறார். பல அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2010 இல் அவரது “தி ஷிப்கில்லர்” சிறுகதை சிறந்த குறுபுனைவுக்கான பிரித்தானிய அறிபுனை விருதினை வென்றது. டி பொடார்டின் மிகவும் அறியப்பட்ட படைப்புகள் அவரது ஆஸ்டெக் காலத்தினைப் பின்புலமாகக் கொண்ட அப்சிடியன் அண்ட் பிளட் (Obsidian and Blood) முக்கதை புதினங்கள். இவை துப்பறிவுப் புனைவு மற்றும் கனவுருப்புனைவுப் பாணிகளின் கூறுகளைக் கொண்டுள்ளன.

குறிப்பிடத்தக்க படைப்புகள்

[தொகு]

அப்சிடியன் அண்ட் பிளட் முக்கதைத் தொடர்

  • செர்வண்ட் ஆஃப் தி அண்டர்வோர்ல்ட் (Servant of the Underworld), 2010
  • ஹார்பிங்கர் ஆஃப் தி ஸ்டோர்ம் (Harbinger of the Storm), 2011
  • மாஸ்டர் ஆஃப் தி ஹவுஸ் ஆஃப் டார்ட்ஸ் (Master of the House of Darts), 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீயெட்_டி_பொடார்ட்&oldid=2714661" இலிருந்து மீள்விக்கப்பட்டது