உள்ளடக்கத்துக்குச் செல்

அலி இமாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி இமாம்
2018 ஆம் ஆண்டு டாக்காவில் அலி இமாம்
பிறப்பு31 திசம்பர் 1950 (1950-12-31) (அகவை 73)
பிரம்மன்பரியா மாவட்டம், வங்காளதேசம்
தேசியம்வங்காளதேசி
பணிஎழுத்தாளர்

அலி இமாம் (Ali imam) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். ஒளி ஒலிசார் காட்சி அமைப்பாளராகவும் செயற்பட்டார். பல அறிவியல் கதைகளையும் , குழந்தைகளுக்கான பயணக் கதைகளையும் எழுதியுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறார் இலக்கியத்தில் இவருக்கு வங்காளதேச அகாடமியின் இலக்கிய விருது வழங்கப்பட்டது.[1]

குழந்தைப் பருவம்

[தொகு]

அலி இமாம் பிராமணபரியாவில் பிறந்தார். பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவரது முழு குடும்பமும் டாக்காவிற்கு மாறியது. தனது குழந்தைப் பருவத்தை பழைய டாக்காவின் லிங்கன் சாலையின் தட்டாரிபசாரில் உள்ள நவாப்பூரில் கழித்தார்.

வேலை

[தொகு]
Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre
அலி இமாம் வடிவமைத்த பங்கபந்து சேக் முசிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம்

இமாம் 630 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 40 புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். குழந்தை உளவியல், மனிதநேயம் மற்றும் சாகசம் ஆகியவை இவரது எழுத்தில் காணப்படுகின்றன.

இமாம் வங்காளதேச தொலைக்காட்சியின் பொது மேலாளராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (in Bengali). Bangla Academy. Archived from the original on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலி இமாம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_இமாம்&oldid=3927256" இலிருந்து மீள்விக்கப்பட்டது