அலகுச் சதுரம்
Appearance

கணிதத்தில் அலகுச் சதுரம் (unit square) என்பது ஓரலகு பக்க நீளமுள்ள ஒரு சதுரம். பெரும்பாலும் இருபரிமாண கார்ட்டீசியன் தளத்தில் அலகுச் சதுரம் என்பது (0, 0), (1, 0), (0, 1), மற்றும் (1, 1) ஆகிய நான்கு புள்ளிகளை உச்சிகளாகக் கொண்ட சதுரத்தைக் குறிக்கும்..
மெய்யெண் தளத்தில்
[தொகு](x , y) அச்சுதூரங்கள் கொண்ட கார்ட்டீசியன் ஆய முறைமையில் வரையறுக்கப்பட்ட அலகுச் சதுரத்துக்குள் அமையும் புள்ளிகளின் x மற்றும் y அச்சுதூரங்களின் மதிப்பு [0, 1] -மூடிய இடைவெளியிலேயே அமையும். அதாவது அலகுச் சதுரமானது இடைவெளி I -ன் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அமையும். இங்கு I என்பது மூடிய அலகு இடைவெளி [0, 1] -ஐக் குறிக்கும்.
கலப்பெண் தளத்தில்
[தொகு]கலப்பெண் தளத்தில் அலகுச் சதுரத்தின் முனைகள் 0, 1, , மற்றும் 1 + -ல் அமைகின்றன..
மேற்கோள்கள்
[தொகு]- Weisstein, Eric W., "Unit square", MathWorld.