அறுபுளோரோபிளாட்டினேட்டு
Appearance

அறுபுளோரோபிளாட்டினேட்டு (Hexafluoroplatinate) என்பது அறுபுளோரோபிளாட்டினேட்டு எதிர்மின் அயனிகளைக் (PtF6−) கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிளாட்டினம் அறுபுளோரைடுடன் வேதிப்பொருட்களைச் சேர்ப்பதால் அறுபுளோரோபிளாட்டினேட்டு உருவாகிறது.
உதாரணங்கள்
[தொகு]- டையாக்சிசனைல் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு (O2PtF6), அரிதாக இதில் டையாக்சிசனைல் ஆக்சி நேர்மின்னயனி சேர்ந்திருக்கும்.
- செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு ("XePtF6"), முதலாவதாகத் தயாரிக்கப்பட்ட மந்தவாயுச் சேர்மம் இதுவாகும்.(The Xe+ இல் உள்ள Xe+ அயனி ஒரு தனி உறுப்பாக நிலைப்புத் தன்மை அற்றதாகும். எனவே XePtF6 சேர்மமும் நிலைப்புத் தன்மையற்றதாக உள்ளது. விரைவில் இது விகிதச்சமமின்றி சிதைந்து XeFPtF5, XeFPt2F11, மற்றும் Xe2F3PtF6.சேர்மங்களாக மாறுகிறது) [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.