உள்ளடக்கத்துக்குச் செல்

அர் ஓட்சுவிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்சுவிம் மலை
הַר חוצבים, அர் ஓட்சுவிம்
இரமத் இசுலோமோவிலிருந்து அர் ஓட்சுவிம்
உயர்ந்த புள்ளி
உயரம்700 m (2,300 அடி)
புவியியல்
அமைவிடம்எருசலேம்
மூலத் தொடர்யூடிய மலைகள்

அர் ஓட்சுவிம் (Har Hotzvim, எபிரேயம்: הר חוצבים‎, பொருள். கல்வெட்டியின் மலை), மற்றும் அறிவியல்-மிகு தொழில்களின் வளாகம் (எபிரேயம்: קריית תעשיות עתירות מדע‎, Kiryat Ta'asiyot Atirot Mada) இசுரேலின் எருசலேமின் வடமேற்கில் அமைந்துள்ள உயர்நுட்ப தொழிற்பூங்கா ஆகும். இன்டெல், டேவா, ஆம்டாக்சு, என்டிஎசு, ஓஃபிர் ஆப்ட்ரானிக்சு, சான்டுவைன், இராடுவேர், ஐடிட்டி குளோபல் இசுரேல் போன்ற அறிவியல் சார்ந்த மற்றும் தொழினுட்ப தொழிலகங்கள் இங்குதான் அமைந்துள்ளன.[1] இத்தகையப் பெரிய நிறுவனங்களைத் தவிர ஏறத்தாழ 100 சிறு, குறு உயர்நுட்ப நிறுவனங்கள் உள்ளதோடு இப்பூங்கா தொழினுட்ப அடைகாப்பகமாகவும் விளங்குகிறது.[2] 2011இல், அர் ஓட்சுவிம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது.[3]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "அலுவல்முறை வலைத்தளம் (ஆங்கிலம்)". Archived from the original on 2007-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  2. "Biojerusalem". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-13. பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்_ஓட்சுவிம்&oldid=3574745" இலிருந்து மீள்விக்கப்பட்டது