உள்ளடக்கத்துக்குச் செல்

அருதவீல் மாகாணம்

ஆள்கூறுகள்: 38°15′05″N 48°17′50″E / 38.2514°N 48.2973°E / 38.2514; 48.2973
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அர்தாபில் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அர்தாபில் மாகாணம்
Ardabil Province
استان اردبیل
Map of Iran with Ardabīl highlighted
ஈரானில் அர்தாபில் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 38°15′05″N 48°17′50″E / 38.2514°N 48.2973°E / 38.2514; 48.2973
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 3
தலைநகரம்அர்தாபில்
Counties10
அரசு
 • ஆளுநர்அக்பர் பெங்ஹாவ்
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்Ardabil Province parliamentary districts
 • MPs of Assembly of ExpertsAmeli & Mousavi
 • Representative of the Supreme LeaderHassan Ameli
பரப்பளவு
 • மொத்தம்17,800 km2 (6,900 sq mi)
மக்கள்தொகை
 (2016)[1]
 • மொத்தம்12,70,420
 • அடர்த்தி71/km2 (180/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRST)
முதன்மை மொழிகள்பாரசீகம் (அலுவல்)
உள்ளூர் மொழிகள்:
அசர்பைஜான் (பெரும்பான்மை)
டாடி
டைலிசு

அர்தாபில் மாகாணம் (Ardabil Province (பாரசீக மொழி: استان اردبیل‎; அசர்பைஜான்: اردبیل اوستانی) என்பது ஈரானில் உள்ள முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் வடமேற்கில் உள்ளது. இந்த மாகாணத்தை ஒட்டி கிழக்கு அசர்பைஜான், சஞ்சன் மாகாணம், கிலானி மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களான உள்ளன.[2] மாகாணத்தின் தலைநகராக அர்தாபில் நகரம் உள்ளது. இந்த மாகாணமானது 1993ஆம் ஆண்டு கிழக்கு அசர்பைஜானுக்கு கிழக்கே உருவாக்கப்பட்டது.

காலநிலையும், நிலவியலும்

[தொகு]

வெப்பம் மிகுந்த கோடைக்கால மாதங்களில் பல சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் நிலவும் குளிர்ச்சியான (அதிகபட்சம் 35 ° C) வெப்ப நிலைக்காக வருகின்றனர். குளிர்காலத்தில் கடுங் குளிரான வெப்பநிலையானது ( −25 °C ) நிலவும்.

இதன் புகழ்வாய்ந்த இயற்கைப் பகுதியானது சபாலன் மலைகள் ஆகும். ஈரானின் மாகாணங்களில் இந்த மாகாணமானது மிகவும் குளிரான மாகாணமாகக் கருதப்படுகிறது. இந்த மாகாணத்தின் பெரும் பகுதியானது பசுமையான, காடுகள் கொண்டதாக உள்ளது.

அலி டேய் மற்றும் ஹொசைன் ரஸாதேட் போன்ற விளையாட்டு வீரர்கள் அர்தாபிலில் இருந்து வந்தவர்கள்.

அர்தாபில்லின் தலைநகரானது காசுப்பியன் கடலில் இருந்து 70 கி.மீ தொலைவில் 18011 கிமீ² பரப்பளவோடு உள்ளது. இந்த நகரானது காசுபியன் கடலுக்கும் அசர்பைசான் குடியரசுக்கும் இடையில், அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.[மேற்கோள் தேவை]

வரலாறு

[தொகு]
ஷேக் சபி கல்லறை

அர்தாபில் மாகாணத்தின் இயற்கை அம்சங்கள் அவெத்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி சரத்துஸ்தர் ஆராஸ் ஆற்றுப் பகுதியில் பிறந்தார் என்றும், மேலும் அவர் சபாலன் மலைகளில் அவரது புத்தகத்தை எழுதினார் என்றும் அறியப்படுகிறது. ஈரானை இஸ்லாமியர் வெற்றி கொண்ட காலகட்டத்தில் அசர்பைசன் பகுதியில் மிகப்பெரிய நகரமாக அர்தாபில் இருந்தது. மங்கோலிய படையெடுப்பு காலம் வரை இந்த நிலை இருந்தது.

ஷா முதலாம் இஸ்மாயில் ஈரான் தேசியத்தை ஒன்றிணைக்க தன் போர்த் தொடர்களைத் துவக்கினார். அதன் விளைவாக தப்ரீசை தனது தலைநகரமாக கி.பி 1500 இல் அறிவித்தார். இருப்பினும், அர்தாபில் ஒரு முக்கிய நகரமாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் நவீன காலம்வரை இருந்து வருகிறது.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாகாணமானது அர்டபில், பிலாசவரர், ஜெர்மி, கல்கல், கொசார், மேஷ்கிஷர், நமீம், சரேயின், நர், பார்சபாத்என 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு அராஸ்பரன் மாவட்டமானது கிழக்கு அசர்பைஜானில் இருந்து அர்தாபில் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மிக அண்மைக் காலங்களில் ஈரானிய அரசு உறுப்புக்களால் தயாரிக்கப்படுத் அர்தாபில் மாகாணத்தின் வரைபடங்களில் அராஸ்பரன் மாவட்டம் இணைத்து காணப்படுகிறது.

பண்பாடு

[தொகு]
அர்தாபில் அருங்காட்சியகம்

அர்தாபில்லில் சாபவித்து வம்ச ஷா சஃபி அட் டின் என்வரின் அடக்கத்தலம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல வெண்ணீர் ஊறுகள் மற்றும் இயற்கைக்காட்சிகள் இங்கு உள்ளன. இங்கு உள்ள பல நீரூற்றுகள் அவற்றின் மருத்துவ குணங்களுக்காக ஈரான் முழுவதும் அறியப்பட்டதாக உள்ளன. மேலும் இந்த மாகாணம் ஏராளமான ஏரிகளைக் கொண்டிருக்கிறது: அவற்றில் மிகப் பெரியது நீரோ, ஷூராபில், ஷூர்ஜல், நவாஷார், அலோசே ஆகியவை ஆகும். இவை சில இவை சில பறவை இனங்களின் வசிப்பிடங்களாக உள்ளன.

அர்தாபில்லில் இருந்து 48 கி.மீ தொலைவில் நீ ஓர் ஏரி உள்ளது. இது 2.1 கிமீ² பரப்பளவு கொண்டதாகவும், சராசரியாக மூன்று மீட்டர் ஆழமுடையதாகவும் உள்ளது. இது ஏரி படுக்கையில் உள்ள நீரூற்றுகளால் உருவானது. சூரபில் ஏரியானது அர்தாபில் நகரின் தெற்கே உள்ள ஒரு மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது 640,000 மீ² பரப்பளவில் பரந்துள்ளது. ஏரிகளின் மேற்பரப்பானது தாதுப்பொருட்களின் ஒரு மெல்லிய வெள்ளை அடுக்கால் மூடப்பட்டிருக்கிறது, இது தோல் நோய்கள் மற்றும் வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுவதாக கருதப்படுகிறது. அர்தாபில் நகரானது தொன்மைவாய்ந்த ஒரு நகரமாகும். இதன் தோற்ற காலகட்டமானது 4000 முதல் 6000 ஆண்டுகள் பழமை வரை செல்கிறது (இந்த நகரத்தில் நடந்த வரலாற்று ஆய்வுகளின் படி). இந்த நகரம் வெவ்வேறு நேரங்களில் அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரமாக இருந்தது, ஆனால் இதன் பொற்காலமானது சாபவித்து காலமாகும்.

ஈரான் மிக பழமையான நகரங்களில் மெஷ்கின் ஷாகர் ஒன்றாகும். இது தெஹ்ரானில் இருந்து 839 கிலோமீட்டர் தொலைவில் ஈரானின் வடமேற்கில் அசர்பைசானில் அமைந்துள்ளது. இது சபாலன் மலைகளை ஒட்டி உள்ள நகரம் ஆகும். கடந்த காலத்தில் இது "கியாவ்", "ஓராமி" மற்றும் "வராவி" என்று அழைக்கப்பட்டது.


கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும்

[தொகு]
  1. அர்தாபில் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  2. மொஹாகெக் அர்தாபில் பல்கலைக்கழகம்
  3. அர்தாபில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம்
  4. அராபபில் பாயாம் நூர் பல்கலைக்கழகம்
  5. அர்தாபில் சவுரே பல்கலைக்கழகம்
  6. கல்கால் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம்

மொழி

[தொகு]

அர்தாபில் மாகாணத்தின் முதன்மை மொழியானது அசர்பைஜான் மொழி, துருக்கிய மொழியின் ஒரு கிளை.[3][4][5] தடி மற்றும் தாலீசில் ஆகியவை அர்தாபில் மாகாணத்தில் உள்ள பிற மொழிகள் ஆகும்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 2013-05-31 at the வந்தவழி இயந்திரம்
  2. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  3. Iran A Country Study, Author Federal Research Division, Edition reprint, Publisher Kessinger Publishing, 2004,
  4. Encyclopedia of the Stateless Nations: S-Z Volume 4 of Encyclopedia of the Stateless Nations: Ethnic and National Groups Around the World, James Minahan,
  5. "CIAO". Archived from the original on 2007-12-01. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  6. "Talysh".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருதவீல்_மாகாணம்&oldid=3431730" இலிருந்து மீள்விக்கப்பட்டது