அரோல்டு மாசுர்சுகி
Appearance
அரோல்டு மாசுர்சுகி Harold Masursky | |
---|---|
பிறப்பு | திசம்பர் 23, 1922 |
இறப்பு | ஆகத்து 24, 1990 | (அகவை 67)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | புவியியல் வானியல் |
விருதுகள் | ஜி. கே. கில்பர்ட் விருது (1990) |
அரோல்டு மாசுர்சுகி (Harold Masursky) (திசம்பர் 23, 1922 - ஆகத்து 24, 1990) ஓர் அமெரிக்கப் புவியியலாளரும் வானியலாளரும் ஆவார்.
இவர் தன் பணியை அமெரிக்கப் புவி அளக்கையியல் துறையில் தொடங்கினார். பின்னர் நாசாவில் முதுநிலை அறிவியல் உறுப்பினராக்ச் சேர்ந்தார். இவர் கோள்களின் மேற்பரப்பையும் நிலாவின் மேற்பரப்பையும் ஆய்வுசெய்தார்.அந்த வான்பொருள்களில் இறங்க அறிவியல் முறைப்படி உகந்த இடங்களைத் தேர்வு செய்யும் ஆர்வத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வு அபொல்லோ திட்ட்த்துக்காகவும் வைகிங் திட்ட்த்துக்காகவும் மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாயின் மாசுர்சுகி குழிப்பள்ளமும் 2685 மாசுர்சுகி குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன. இதேபோல, மாசுர்சுகி விருதும் மாசுர்சுகி விரிவுரையு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- Obituary
- Description of the Masursky Award பரணிடப்பட்டது 2004-08-03 at the வந்தவழி இயந்திரம்