அரோமா தத்தா
அரோமா தத்தா Aroma Dutta | |
---|---|
আরমা দত্ত | |
வங்காள தேச நாடாளுமன்ற உறுப்பினர் | |
11 ஆவது யாட்டிய சங்சத் | |
நாடாளுமன்ற உறுப்பினர் பெண்கள் தொகுதி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1950 சூலை 20[1] |
தேசியம் | பங்களாதேசி |
உறவினர் | திரேந்திரநாத் தத்தா (தாத்தா), இரித்விக் குமார் காதக் (மாமா) |
கல்வி | எ,.எசு, எம்.ஐ.ஏ [1] |
வேலை | மனித உரிமைகள் செயற்பாட்டாளர்[1] |
அரோமா தத்தா (Aroma Dutta) வங்காள தேசம் நாட்டைச் சேர்ந்த சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலராவார். 2019 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆளும் கட்சியான வங்கதேச அவாமி லீக் கட்சியால், நாடாளுமன்ற தேர்தலுக்காக 11 வது பாராளுமன்றத்தில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட 50 இடங்களில் ஒரு இடத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பாக்கித்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினரும், வங்காள மொழியை மாநில மொழியாகக் கோரிய[2] முதல் நபருமான திரேந்திரநாத் தத்தா அரோமா தத்தாவின் தாத்தா ஆவார். இவர் பாக்கித்தான் இராணுவ உறுப்பினர்களால் வங்கதேச விடுதலைப் போரில் கொல்லப்பட்டார். எனவே வங்க தேசத்தின் ஒரு தியாகியாகக் கருதப்படுகிறார்.[3] அரோமாவின் தந்தை சஞ்சிப் தத்தா, பாக்கித்தான் அப்சர்வர் என்ற பத்திரிகையில் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளராவார்.[2] வங்காள தேச விடுதலைப் போருக்குப் பிறகு பிரம்மன்பாரியாவில் உள்ள அரோமாவின் மூதாதையர் வீடு, சொத்துரிமைச் சட்டத்தின் மூலம் இசுலாமியர்களால் கையகப்படுத்தப்பட்டது. அரோமா அதை உள்ளூர் நீதிமன்றங்கள் மூலம் திரும்பப் பெற முயன்றார். ஆனால் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.[4] அரோமா தத்தா வங்காள தேசத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றினார். இவரது மாமா ரித்விக் குமார் காதக் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[5]
தொழில்
[தொகு]அரோமா தத்தா தனியார் கிராமிய முன்முயற்சி திட்டம் என்ற அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனராகப் பணிபுரிந்தார்.[6] வடிவமைப்பு மற்றும் செயல்படுத்துதல் இரண்டிலும் இந்த அறக்கட்டளை தனித்துவமானதாகும். ஏழைகளின் வளர்ச்சித் தேவைகளுக்கு சேவை செய்வதை அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
2012 ஆம் ஆண்டில், இந்து திருமண பதிவு சட்டத்தின் வரைவு ஆவணத்தை விமர்சித்தார். இந்து திருமண பதிவு சட்டத்தில் திருமண பதிவு என்பது கட்டாயமாக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.[7] வங்காள தேசத்தில் நிகழும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை இவர் எதிர்த்தார். காக்சு பசாரில் புத்தமத பக்தர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.[8] மதச் சிறுபான்மையினரை நியாயமற்ற முறையில் குறிவைக்கும் சொத்துரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் இவர் பேசியுள்ளார்.[9] வங்காளதேசத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, நாட்டில் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதே என்று அரோமா தெரிவித்துள்ளார்.[10]
அங்கீகாரம்
[தொகு]2016 ஆம் ஆண்டில் அரோமா தத்தாவுக்கு வங்காளதேச அரசால் பேகம் ரோகேயா பதக்கம் வழங்கப்பட்டது. தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் பாதிக்கப்படக்கூடிய தேர்தல் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளை நிறுத்துமாறு அரோமா தத்தா அழைப்பு விடுத்தார். 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் தனது தந்தை சார்பாக வங்கியின் குமுதினி நல அறக்கட்டளையால் தன்பீர் ரனாடா பிரசாத் நினைவு மரியாதை மற்றும் தங்கப் பதக்கம் பெற்றார். டாக்காவில் ஒரு வட்டமேசை கலந்துரையாடலில் தலித்துகள், தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென அரோமா தத்தா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். பெண்கள் மற்றும் பிற ஓடுக்கப்பட்ட குழுக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து அரோமா தத்தாவுக்கு தெளிவான பார்வை இருந்தது. முடிவெடுக்கும் பதவிகளில் அதிகமான பெண்களைப் பார்க்க வேண்டுமென இவர் விரும்பினார். கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் அரசியல் ஈடுபாடு ஆகிய கூறுகளை பெண்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார். இந்த இலக்குகளை அடையவும் இனத்தை மேம்படுத்தவும் கூடிய சட்ட மாற்றங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Constituency 311". www.parliament.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ 2.0 2.1 2.2 "Aroma, Suborna to become MP as Awami League names 41 for reserved seats". bdnews24.com. 2019-02-08. https://bdnews24.com/politics/2019/02/08/aroma-suborna-to-become-mp-as-awami-league-names-41-for-reserved-seats.
- ↑ "Datta, Dhirendranath". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ Tripathi, Salil (2016). The Colonel Who Would Not Repent: The Bangladesh War and Its Unquiet Legacy. Yale University Press. pp. 286–287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-21818-3.
- ↑ "Ritwik Kumar Ghatak recalled in Rajshahi" (in en). The Daily Star. 17 December 2009. http://www.thedailystar.net/news-detail-118132.
- ↑ "Aroma Dutta, Noorjahan Begum receive Begum Rokeya Award-2016". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2016/12/09/aroma-dutta-noorjahan-begum-receive-begum-rokeya-award-2016.
- ↑ "Make registration mandatory" (in en). The Daily Star. 23 May 2012. http://www.thedailystar.net/news-detail-235379.
- ↑ "Punish attackers" (in en). The Daily Star. 2 October 2012. http://www.thedailystar.net/news-detail-252148.
- ↑ "'Revise bill on vested property return act'" (in en). The Daily Star. 19 September 2010. http://www.thedailystar.net/news-detail-155072.
- ↑ "Proper implementation of laws needed" (in en). The Daily Star. 28 November 2014. http://www.thedailystar.net/proper-implementation-of-laws-needed-52435.