உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்
Arunachal Pradesh State Commission For Women
Commission மேலோட்டம்
அமைப்பு1993
ஆட்சி எல்லைஅருணாச்சலப் பிரதேச அரசு
தலைமையகம்அருணாச்சல பிரதேச மாநில மகளிர் ஆணையம், 'சி' பிரிவு, இட்டாநகர், 791111.[1]
Commission தலைமை
  • இரதிலு சாய், தலைவர்
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் (Arunachal Pradesh State Commission for Women) என்பது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . மாநிலத்தில் பெண்கள் நலனுக்கான ஆணையம் அருணாச்சல பிரதேச அரசால் ஓர் அரை நீதித்துறை அமைப்பாக அமைக்கப்பட்டது.

வரலாறு மற்றும் குறிக்கோள்கள்

[தொகு]

1993 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிக்கவும், மாநிலத்தின் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதும் இதன் நோக்கங்களாகும். [2] குடும்பம் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கும் எதிராக பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் ஆணையம் போதுமான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது:

  • பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல்.
  • சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறினால் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கான எந்த உரிமையும் பறிக்கப்பட்டால் சரியான நேரத்தில் தலையிடுவதும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாள்வதும் நோக்கங்களாகும்.
  • பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தல்.
  • மாநிலத்தில் பெண்கள் அடிப்படையிலான சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தல்[3]

உறுப்பினர்கள்

[தொகு]

அருணாச்சல பிரதேச மாநில மகளிர் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. [4] [5]

இரதிலு சாய் (டெக்சி) அருணாச்சல பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆவார். [4] அவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

செயல்பாடுகள்

[தொகு]

அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் கீழ்கண்ட செயல்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பை ஆணையம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும்.[6]
  • மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்.
  • மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்யும்.
  • பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யுயம்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்களைக் கொண்ட பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுக அனுமதிக்கும்.
  • மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.
  • பெண்களின் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் அவர்கள் தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்கு அறிக்கை செய்தல்.
  • பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகம், சிறை அல்லது இதர இடங்கள், வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருதல்.
  • ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரித்தல் மற்றும் ஆய்வு செய்தல்
  • கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஏதேனும் ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைத்தல் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறிதல்.
  • பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது அவர்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரித்தல் போன்றவை இதன் செயல்பாடுகளாகும்.

தொடர்புடைய கட்டுரைகள்

[தொகு]

தேசிய மகளிர் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arunachal Pradesh State Commission for Women". Arunachal Pradesh State Commission for Women. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  2. Rajagopalan, Swarna (30 May 2016). "Why National and State Women’s Commissions are important and should be held accountable". dnaindia.com. https://www.dnaindia.com/india/report-why-national-and-state-women-s-commissions-are-important-and-should-be-held-accountable-2217939. 
  3. "Arunachal Pradesh State Commission for women conducted a One Day Legal Awareness Camp". roing.nic.in. 22 November 2021. https://roing.nic.in/arunachal-pradesh-state-commission-for-women-conducted-a-one-day-legal-awareness-camp/. 
  4. 4.0 4.1 "Arunachal Pradesh govt constitutes state women commission". business-standard.com. 28 December 2018. https://www.business-standard.com/article/pti-stories/arunachal-pradesh-govt-constitutes-state-women-commission-118122800546_1.html. 
  5. "Men should know laws on women’s rights: APSCW". arunachalobserver.org. 24 November 2021. https://arunachalobserver.org/2021/11/24/men-should-know-laws-on-womens-rights-apscw/. 
  6. "Arunachal women’s panel defends draft Inheritance Bill". thehindu.com. 23 August 2021. https://www.thehindu.com/news/national/arunachal-womens-panel-defends-draft-inheritance-bill/article36042475.ece. 

புற இணைப்புகள்

[தொகு]