அருங்காட்சியகவியல்
Appearance
அருங்காட்சியகவியல் (Museology) என்பது அருங்காட்சியகங்கள் பற்றிய கல்வித் துறை ஆகும். பன்னாட்டு அருங்காட்சியகங்கள் மன்றம் (International Council of Museums - ICOM), அருங்காட்சியகவியல் என்பது அருங்காட்சியக அறிவியல் என வரைவிலக்கணம் தந்துள்ளது.[1] இது, அருங்காட்சியகங்களின் வரலாறு மற்றும் பின்னணி, சமுதாயத்தில் அவற்றின் பங்கு, சிறப்பு ஆய்வு முறைகள், காப்புக் கல்வி மற்றும் அமைப்பு, பௌதிகச் சூழலுடனான தொடர்பு, பல்வேறுபட்ட அருங்காட்சியகங்களின் வகைப்பாடு போன்றவற்றுடன் தொடர்புபட்டது. அருங்காட்சியகங்களை நடத்துவதற்கான முறைகள், நடைமுறைகள் ஆகியவற்றை அருங்காட்சியகவியல் உள்ளடக்குகிறது.
முக்கிய தலைப்புகள்
[தொகு]- அருங்காட்சியங்களின் சமூக பண்பாட்டு பயன்பாடு.
- அருங்காட்சியவியல் கோட்பாடுகள்
- அருங்காட்சியங்களின் தோற்றம், கருத்தியல்கள், நடைமுறைகள், எதிர்காலம்
- அருங்காட்சியவியல் மேலாண்மை
- சேகரிப்புகள் - collections
- காப்பாட்சி - curatorship
- அருங்காட்சியகக் கல்வி, நிகழ்ச்சித் திட்டமிடல் (programming)
உசாத்துணைகள்
[தொகு]- Jeyaraj, V., Musicology - Heritage Management, Director of Museums, Government of Tamilnadu, 2005.
குறிப்புகள்
[தொகு]- ↑ Jeyaraj, V., 2005. p. 1.