அரியான்பொய்கை செல்லத்துரை
அரியான்பொய்கை க. செல்லத்துரை (இறப்பு: சனவரி 2011[1]) ஈழத்து மூத்த கலைஞரும் படைப்பாளியும் ஆவார். வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்திய வரலாற்றாய்வாளர். வன்னியின் நாட்டார் இலக்கியங்களை அச்சுவடிவிற்கு கொண்டுவருவதில் இவர் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகித்தவர்.
இலங்கையின் வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் நெடுங்கேணி, அரியாமடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்த செல்லத்துரை முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீருற்று எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
இலக்கியப் பங்களிப்பு
[தொகு]வன்னியில் மதங் கொண்ட யானையை அடக்கிய பெண் ஒருத்தியின் வரலாற்றைக் கூறும் "வேழம்படுத்த வீராங்கனை" என்னும் முல்லைமோடியில் அமைந்த நாட்டுக்கூத்தை எழுதி நூலாக்கியுள்ளார்[2]. இதற்காக இவர் கவிகேசன், தமிழ்மணி ஆகிய விருதுகளைப் பெற்றார்.
ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த வன்னியின் தொன்மைகளை வெளிப்படுத்தவல்ல படைப்புக்கள், வாகடங்கள், நாட்டார் இலக்கியங்கள், சிந்துநடைக்கூத்துக்கள் ஆகியவற்றைத் துரிதமாக வாசித்தறியும் திறன்கொண்ட அரியான்பொய்கை செல்லத்துரை மிகவேகமாக எழுத்தாணி மூலம் ஓலைச்சுவடியில் எழுதும் ஆற்றலும் பெற்றவராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வன்னியின் மூத்த கலைஞர் அரியான்பொய்கை செல்லத்துரை காலமானார் பரணிடப்பட்டது 2011-01-12 at the வந்தவழி இயந்திரம், மீனகம், சனவரி 10, 2011
- ↑ நாட்டாரியல் ஆய்வு பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம், ஆய்வரங்கக் கட்டுரைகள் - 2000, நூலகம் திட்டம்