அரித்மோமீட்டர்
அரித்மோமீட்டர் (Arithmometer அல்லது Arithmomètre) என்பது அலுவலக சூழலில் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வலிமையானதும் நம்பகமானதுமான முதலாவது எண்ணிம இயந்திரக் கணிப்பான் ஆகும். இந்தக் கணிப்பானால் இரண்டு எண்களை நேரடியாகக் கூட்டி கழிக்கவும், நீண்ட பெருக்கல், வகுத்தல்களையும் திறம்பட செய்ய முடியும்.
1820-இல் பிரான்சைச் சேர்ந்த தாமசு டி கோல்மர் அரித்மோமீட்டர் எனும் இந்தக் கணக்கிடும் விசைமுறைக் கருவியை வடிவமைத்துக் காப்புரிமை பெற்றார். இது 1851 இல் முதன் முதலாக உருவாக்கப்பட்டு[1] 1915 வரை தொடர்ந்தது. வணிகரீதியாக வெற்றிபெற்ற முதல் பொறிமுறைக் கணிப்பான் ஆகும்.[2] அதன் உறுதியான வடிவமைப்பு, நம்பகத்தன்மை, துல்லியம் ஆகிய பண்புகள் ஒரு வலுவான நற்பெயரை அதற்குக் கொடுத்தது.[3] அத்துடன் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்த மனிதக் கணினிகளில் இருந்து கணக்கிடும் இயந்திரங்களுக்கு நகர்வதில் இது முக்கிய பங்காற்றியது.[4]
1857 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த தாமசு இல் என்பவர் எண்-விசைப்பலகையை, பயனர்-இடைமுகமாகக் கொண்ட, இம்ப்ரூவ்ட் அரித்மோமீட்டர் எனும் கணிப்பான் கருவியை வடிவமைத்தார். இதன் தொடர்சியாக லியனார்ட் நூட்சு(1858), சோசப் அலெக்சான்டர்(1864), பெர்டிரிக் அர்சுபெர்கர்(1866), கில்பெர்ட் சாப்லின்(1870), டேவிட் கரோல்(1876) ஆகியோரும் அமெரிக்க ஒன்றியத்தில் அரித்மோமீட்டரை ஒத்த கணக்கிடும் கருவிகளை வடிவமைக்கலாயினர்.
இவற்றையும் படிக்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Brevets & Descriptions" [Patents & Descriptions]. www.arithmometre.org (in French). English translation available. பார்க்கப்பட்ட நாள் 2017-08-15.
{{cite web}}
: CS1 maint: others (link) CS1 maint: unrecognized language (link) - ↑ Chase G.C.: History of Mechanical Computing Machinery, Vol. 2, Number 3, July 1980, page 204, IEEE Annals of the History of Computing
- ↑ Ifrah G., The Universal History of Numbers, vol 3, page 127, The Harvill Press, 2000
- ↑ Grier D.A.: When Computers Were Human, page 93, Princeton University Press, 2005
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அரித்மோமீட்டர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Arithmometre.org – Main page – Complete history and model information
- Arithmometre.org – Clones – List of arithmometer clone manufacturers
- ami19.org – A great site for patents and articles on 19th century mechanical calculators
- Making the Arithmometer count – An in-depth study of the machine
- Rechenmaschinen-Illustrated – A large display of mechanical calculators
- How the Arithmometer Works A detailed animation describing the design and workings of the arithmometer calculator.