அரிச்சித்திரம்

அரிச்சித்திரம் (Etching) என்பது பாரம்பரியமாக வீரிய அமிலம் அல்லது சாயமூன்றியைப் பயன்படுத்தி உலோகப் பரப்பின் குறிப்பிட்ட பகுதியை அரிக்கவைத்து உலோகத்தில் உருசெதுக்கல் செய்யும் ஒரு செயல்முறையாகும். [1] நவீன காலத்தில் மற்ற மூலப் பொருட்களில் இதை உருவாக்க பிற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அச்சுத் தொழிலில் அச்சுத் தயாரிப்பில் வேலைப்பாடுகளுடன் கூடிய, பழைய மாஸ்டர் பிரிண்ட்டுகளுக்கான மிக முக்கியமான நுட்பம் இதுவாகும். இது இன்றும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. மைக்ரோ ஃபேப்ரிகேஷன் எச்சிங் மற்றும் ஃபோட்டோகெமிக்கல் மில்லிங் போன்ற பல நவீன மாற்றுருவங்களில், மின்சுற்றுப் பலகைகள் உட்பட நவீன தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரியமாக அரிச்சித்திரம் உருவாக்கப் பயன்படுத்தபடும் உலோகத் தகட்டில் (பொதுவாக தாமிரம், துத்தநாகம், எஃகு) அமிலத்தால் பாதிக்கபடாத மெழுகு பூசப்பட்டு மெழுகு களம் உருவாக்கப்பட்டிருக்கும். [2] அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தக் களத்தின்மீது ஒரு உறுதியான ஊசியினால் வரைவார். [3] இதனால் வரையப்பட்ட இடங்களில் மட்டும் மெழுகுகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும். [4] இதன் பிறகு தகடு அமிலத்தில் கழுவப்படுகிறது அல்லது நனைக்கப்படுகிறது. இது சாயமூன்றி அல்லது எச்சண்ட் என அழைக்கப்படுகிறது. [5] இதனால் ஊசியால் கீரப்பட்ட பகுதியில் உள்ள உலோகம் மட்டும் அமிலத்தால் "அரிக்கபடுகிறது" ( ஒடுக்க ஏற்ற வேதிவினைக்கு உட்படுகிறது) அமிலத்தில் மூழ்கி இருக்கும் நேரம், அமிலத்தின் வீரியம் ஆகியவற்றைப் பொறுத்து உலோகத் தகட்டின் மெழுகு களத்தில் உள்ள கீரலில் ஆழமாக அரிக்கபடுகிறது (மெழுகுக் களத்தில் செதுக்கியது போல்). தகட்டில் வரைந்த ஓவியம் தேவையான அளவு அரிக்கபட்டுள்ளது உறுதி செய்யபட்டபிறகு, தகட்டில் உள்ள மெழுகுப் பூச்சு அகற்றபடுகிறது. பின்னர் தகட்டின்மீது அரிக்காதவியல்புடைய மையைத் தடவி மேற்பரப்பைச் சுத்தமாக துடைத்து, அரித்த பள்ளங்களில் மட்டும் மை நிரம்பி நிற்குமாறு விடப்படுகிறது.
தகடு பின்னர் உயர் அழுத்தம் மிக்க அச்சு இயந்திரத்தில் பொருத்தபட்டு அச்சிடவேண்டிய தாளின் மீது அழுத்தபடுகிறது (பெரும்பாலும் தாளை மென்மையாக்க ஈரமாக்கபடுகிறது). [6] இந்தத் தகட்டில் பொறிக்கப்பட்ட கோடுகளிலில் படிந்துள்ள மை தாளில் பதிந்து அச்சாகிறது. இதுபோன்று பல முறை மீண்டும் மீண்டும் அச்சிடலாம்; பொதுவாக இதில் பல நூறு பிரதிகளை தகடு விரிசல் விழும்வரை அச்சிடலாம். இந்த தட்டுகளில் உள்ள வேலைப்பாடுள் மீது மீண்டும் மெழுகு பூசி, ஊசியில் கீறி அமிலத்தில் இடுதல் மூலமாக அச்சில் கூடுதலான வேலைப்பாடுகளை சேர்க்கலாம் அல்லது திருத்தலாம். [7]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Etching | Definition of etching by Merriam-Webster". Merriam-webster.com. Retrieved 2015-08-11.
- ↑ "The Artist's Studio : What Is Etching?" (PDF). Cairnsregionalgallery.com.au. Archived from the original (PDF) on 2015-09-06. Retrieved 2015-08-12.
- ↑ "Abraham Bosse" (in பிரெஞ்சு). Expositions.bnf.fr. Retrieved 2015-08-11.
- ↑ "Abraham Bosse" (in பிரெஞ்சு). Expositions.bnf.fr. Retrieved 2015-08-11.
- ↑ "Abraham Bosse" (in பிரெஞ்சு). Expositions.bnf.fr. Retrieved 2015-08-11.
- ↑ "Abraham Bosse" (in பிரெஞ்சு). Expositions.bnf.fr. Retrieved 2015-08-11.
- ↑ "Printmaking - Lithography | Britannica".