அரிச்சந்திரா (1998 திரைப்படம்)
Appearance
அரிச்சந்திரா (Harichandra) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் செய்யார் இரவி இயக்கத்தில் கார்த்திக், மீனா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். துணை வேடங்களில் பிரியா ராமன், சின்னி ஜெயந்த், விவேக், டெல்லி கணேஷ், சத்தியப்பிரியா ஆகியோர் நடித்தனர். இப்படம் 1998 மே 15 அன்று வெளியிடப்பட்டு நல்ல வசூல் செய்து வெற்றி பெற்றது. இதனையடுத்து தெலுங்கில் ஜே. டி. சக்ரவர்த்தி, ராசி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து ஹரிச்சந்திரா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக் - அரிச்சந்திரா[1]
- மீனா - நந்தினி
- பிரியா ராமன் - சித்ரா
- சின்னி ஜெயந்த் - சுந்தரம்
- விவேக் - கோபால்
- வையாபுரி - முத்து
- டெல்லி கணேஷ் - அரிச்சந்திராவின் தந்தை
- சத்தியப்பிரியா - அரிச்சந்திராவின் அம்மா
- ஆனந்த்- ஜோசப்
- தலைவாசல் விஜய் - சித்ராவின் தம்பி ரகு
- ஜனகராஜ் - மருத்துவர்
- வினு சக்ரவர்த்தி - அந்தோணி
- தியாகு - பொது மேலாளர்
- மோகன் ராமன்
- கவிதாலயா கிருஷ்ணன்
- டி. எஸ். இராகவேந்திரா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஆர். ஆனந்த், கோபால் இராவ், சீலீன் ஆகிய மூன்று பேர் கொண்ட இசைக்குழு ஆகோஷ் என்ற பெயரில் இசையமைத்துள்ளனர். பாடல் வரிகளை பிறைசூடன், பழனி பாரதி, அறிவுமதி, வாசன், இரவிசங்கர் ஆகியோர் இயற்றினர்.
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "அரிச்சந்திரன் வரான்" | கோபால் ராவ் | ||||||||
2. | "முந்தானைச் சேலை" | மனோ, கே. எஸ். சித்ரா | 03:47 | |||||||
3. | "காதல் என்பது" | சுவர்ணலதா | ||||||||
4. | "நாடோடிப் பாட்டு பாட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:36 | |||||||
5. | "என்ன இது கனவா" | மனோ, சுஜாதா மோகன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கார்த்திக் முத்துராமன்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.