அரவு வடிவம்
Appearance

அரவு வடிவம் (Serpentine Shape) என்பது ஒரு பொருள்,அல்லது வடிவமைப்பின் வளைந்த வடிவமானது, பாம்பின் வடிவத்தை (அரவு/அரவம் என்றால் பாம்பு) ஒத்து இருப்பதாகும். கட்டிடக்கலை, தளபாடம், கணிதம் ஆகிய துறைகளில் அரவு வடிவங்களின் பயன்பாடு உள்ளது.

தளபாடத்தில்
[தொகு]
தளபாடத்தில், அரவு-முகப்பு பேழைகளில் ஒரு குவிந்த பகுதியானது, இரு குழிந்த பகுதிகளுக்கு நடுவே இருக்கும்.[1]
கணிதத்தில்
[தொகு]
அரவு வளைகோடு என்பது y(a2 + x2) = abx என்ற காட்டீசியன் சமன்பாடு உடைய, ஐசக் நியூட்டன் விவரித்த ஒரு கன வளைகோடு ஆகும். இந்த வளைகோடானது, 2y = ±b என்ற இணைகோடுகளுக்கு இடையில் இருக்கும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Popular Science, Feb 1932, p. 100.
- ↑ 1911 Encyclopædia Britannica
- ↑ *O'Connor, John J.; Robertson, Edmund F., "Serpentine", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.