அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்
குறிக்கோளுரை | سبق پھر پڑھ صداقت کا عدالت کا |
---|---|
வகை | அரசு இளங்கலை மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 2006 |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | பேராசிரியர் பஷீர் அகமது பாரி |
அமைவிடம் | நவ்போரா கலன் (பழமண்டி அருகில்) , , , 193201 34°17′16″N 74°26′06″E / 34.2877442°N 74.4350755°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | உருது, ஆங்கிலம், காசுமீரி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சோப்பூர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சோப்பூர் அரசு மகளிர் கல்லூரி, இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.
காசுமீர் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, அறிவியல், கணினி பயன்பாடு போன்ற பிரிவுகளில் இளங்கலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தன்னாட்சி கொண்ட இந்த மகளிர் பட்டப்படிப்பு கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் (இந்தியா) சட்டம், 1956 பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]
அமைவிடம்
[தொகு]இந்தக் கல்லூரி சோப்பூரில் (ஆப்பிள் நகரம்) ஆசியாவின் மிகப்பெரிய பழ மண்டிக்கு அருகில் அமைந்துள்ளது. [3] சோபோரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான பாரமுல்லாவிலிருந்து 17 கிமீ தொலைவிலுஂம், மாநில கோடைக்காலத் தலைநகரான சிறிநகரிலிருந்து 49 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
உருவாக்கம்
[தொகு]இந்தியப் பிரதமரின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் முப்தி முகமது சயீத் முதலமைச்சராக இருந்தபோது, 2005 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, 2006 ஆம் ஆண்டில் மறைந்த டாக்டர் குலாம் நபி லோன் மூலமாக திறக்கப்பட்டது.
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் கலை, கணினி பயன்பாடு மற்றும் அறிவியல் பிரிவுகளில் பல்வேறு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை படிப்புகள்
[தொகு]- கலைகளில் இளங்கலை
- அறிவியல் இளங்கலை (மருத்துவம்)
- அறிவியல் இளங்கலை (மருத்துவம் அல்லாத)
- கணினி பயன்பாட்டு இளங்கலை (BCA)
- வீட்டு அறிவியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
- ↑ "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
- ↑ "Govt. Degree College for women, Sopore,district: Baramulla". பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.